August 30, 2017

ஆதார் கார்டு மற்றும் PAN கார்டு இணைக்க டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிப்பு...

பல்வேறு பயனாளிகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பிற்கு காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில்,
வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு-மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்.

August 29, 2017

Breaking News: செப்டம்பர் 7 முதல் தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு.



தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமான ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - அரசுக்கு பரிந்துரை

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ICT Traing for 9th & 10th Teachers - ஆசிரியர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பயிற்சி!

வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 37,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

பத்தாம் வகுப்பு புவியியல் வரைபடம் part 2



SEPTEMBER SCHOOL CALENDER - 2017..


வேலை நிறுத்தம் நடக்குமா? : அரசு ஊழியர்கள் இன்று முடிவு.

அடுத்த வாரம் துவங்க உள்ள, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை ரத்து செய்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

August 28, 2017

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் !!

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!
நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு

August 27, 2017

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்...

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

August 26, 2017

talent exams introduction in tamil திறனாய்வுத் தேர்வுகள் ஓர் அறிமுகம்


திறனாய்வுத்தேர்வுகள் அறிவோம்



           8 ஆம் வகுப்பு பயிலும்  அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்


   10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும்  பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்


  இதெல்லாம் சாத்தியமா? என்று ஐயம் தோன்றுகிறதா ?


    இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள்

 அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் .


என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு.kalvikathir





   மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE )  என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .




தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS

Ø  தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்... Kalvikathir.Blogspot


Ø   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:


  7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்


  தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.


  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


  அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 50


Ø  தேர்வு நடைமுறை:


   ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


ü  மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST


 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்kalvikathir. Blogspot



இடைவேளை – 20 நிமிடங்கள்


ü  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST


 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



Ø  தேர்ச்சி முறை:

 MAT மற்றும் SAT  தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .

(தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்).


 மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு.


  ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.


  நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )  தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS



Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/  உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம்  வகுப்பு மாணவர்கள்


Ø   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:


  8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்


 தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.kalvikathir. Blogspot


  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


 ஜூலை அல்லது செப்டமப்ர்  மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 10


Ø  தேர்வு நடைமுறை:


  ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.



  மனத்திறன் தேர்வு (MAT) - MENTAL ABILITY TEST... Kalvikathir. Blogspot

 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


இடைவேளை – 20 நிமிடங்கள்


  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



Ø  தேர்ச்சி முறை:


  மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர்

.

  வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.


  ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும்.kalvikathir. Blogspot






தேசிய திறனாய்வுத்தேர்வு

 ( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE



Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:



        அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்


               NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும்


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


  ஜூலை அல்லது செப்டம்பர்  மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 50


Ø  தேர்வு நடைமுறை:


  ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.


   90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்
...kalvikathir. Blogspot

  ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50மதிப்பெண்கள்


பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


Ø  தேர்ச்சி முறை:


ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.


 ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.)


 மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.




NTSE - STAGE - 2 –  

               மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும்


  தேர்வுக்கட்டணம்¸கிடையாது.


முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

   ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்

  (objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


  வினாத்தாள் இந்தி  மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். kalvikathir. Blogspot



     மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST

 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்


 ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST –

 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்


  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

100 வினாக்கள் -  100 மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும்.


Ø  தேர்ச்சி முறை:

 MAT மற்றும் SAT  தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்).


 ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது.


 மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.


  தேர்வு செய்யப்படும் மாணவர்களில்

·          15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்

·          7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்

·          3%  மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.



ü   11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 1250வீதமும்


ü  இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது  மாதந்தோறும் ரூ. 2000வீதமும்


ü   முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் :




    மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும்  உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.


    படிப்பறிவுத்திறன்   (SAT) தேர்வில்


அறிவியல்


கணிதம்


சமுக அறிவியல் ..kalvikathir. Blogspot



ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.



மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும்.


Ø  பகுத்தாயும் திறன்

Ø  காரணம் அறியும் திறன்

Ø  சிந்திக்கும் திறன்

Ø  முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன்

Ø  முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன்


  போன்ற திறன்களை வெளிப்படுத்த மனத்திதிறன் தேர்வு வினாக்களில் போதிய பயிற்சி அவசியம் ஆகும்.


  மனத்திறன் தேர்வு நன்கு வினாக்களை புரிந்துகொண்டு சரியான திறனை வெளிப்படுத்தி விடையளித்தால் மிக எளியதாக் அமையும்.


மேலும் மனத்திறன் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு  பிற்காலத்தில் அரசுப்பணிகள் தேர்வு எழுதவும், வங்கி மற்று இரயில்வே தேர்வுகளை எழுதவும், குடிமைப்பணி தேர்வு எழுதவும் பெரிதும் துணை செய்யும்.


எனவே தகுதியுடைய அனைத்து மாணவர்களும் திறனாய்வுத்தேர்வுகளில் பங்கேற்று தங்கள் எதிகாலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்.



தயாரிப்பு :


சே. கணேஷ், பட்டதாரி ஆசிரியர் ,


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,
கிளரியம்


திருவாரூர் மாவட்டம்


நன்றி

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்...

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

August 25, 2017

Digital SR Booklet கணிணி மயமாக்கப்பட்ட மாதிரி பணிப் பதிவேடு..

பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய முதன்மை செயலர்!

தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலராக பிரதீப் யாதவை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் கல்வி துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களை

August 24, 2017

நிலையற்ற ஆட்சியில் விழிபிதுங்கி நிற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (தினகரன் செய்தித்தாள்)


ஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலுத்த வேண்டும்?

ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.


ஒரு வேளை ஜியோ ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், அருகில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ முகவர்களை நாடுங்கள். அல்லது ஜியோ.காம் (jio.com) என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது செல்போனில் இருக்கும் மை ஜியோ ஆப் மூலமாகவோக் கூட முன்பதிவு செய்யலாம்.

ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவு...


தமிழக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராடுவதன் காரணம் என்ன?

பள்ளி ஆசிரியர்களும்  அரசுப் பணியாளர்களும் இணைந்து, தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தால், பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் அடிக்கடி ஸ்தம்பிக்கின்றன.

கணினி மயமாகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் - கருவூலகணக்குத் துறை முதன்மை செயலர் பேச்சு…

அரசுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக கணினி மயமாகிறது என்று கருவூலகணக்குத் துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் பேசினார்.

மாதச் சம்பளதாரர்கள் ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம் எடுப்பது எப்படி?

நம் நாட்டில் மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும், பி.எஃப் கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை இதுவரை படிவம் மூலமாக விண்ணப்பித்துப் பெற்றுவந்தோம். இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Employment Registration 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..

August 22, 2017

ஜாக்டோ ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் - தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு இயந்திரம் முடங்கியது. (தந்தி TV தகவல் இணைப்பு)







                 

                       Thanks to தந்தி TV

🔸 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

🔹 இந்த திட்டத்தில் 5 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்.

Flash News: தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது, நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தகவல்.



💉 நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு உடனே தொடங்க வேண்டும் என்றும், செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

August 21, 2017

இதுதான் தமிழகத்தின் புதிய அமைச்சரவை:

தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்.

1. எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாடு முதல்வர்
2. ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை
3. மாஃபா பாண்டியராஜன்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுப் பொதுத் தேர்வு செப்டம்பர்' 2017 கால அட்டவணை வெளியீடு.


Flash News:ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமனம்

மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு.

அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

August 20, 2017

கல்வியில் சிறந்த மாநிலம் : தமிழகத்திற்கு மத்திய அரசு கவுரவம்...

 ''மத்திய அரசு, எந்த நுழைவுத் தேர்வை கொண்டு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

August 19, 2017

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவெடுப்பது அவர்கள் உரிமை

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவெடுப்பது அவர்களின் உரிமை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சமூக அறிவியல் பத்தாம் வகுப்பு புவியியல் வரைபட பயிற்சி வீடியோ பகுதி1

தயாரிப்பு..

து.விஜயன்..
அரசுகள் உயர் நிலை பள்ளி,
பெரியாக்குறிச்சி..
செந்துறை ஒன்றியம்..
அரியலூர் மாவட்டம்..

வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்..



August 15, 2017

TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.


அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

317 நாட்களில் 3053 செய்திகளை பதிவிட்டு, 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது உங்கள் கல்விக் கதிர்...


📚 கல்விக்கதிர் - 317 நாட்களில், 3053 செய்திகளை பதிவிட்டு, 10 இலட்சம் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.🌾


August 14, 2017

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் விரைவில் நியமனம்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன.

August 13, 2017

நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் நுழைவுத் தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

RMSA TAMIL MODULE 2017-2018

August 12, 2017

CPS : பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி...

பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

August 11, 2017

Flash News: PG TRB Results 2017 Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17 DIRECT LINK

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17
EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

பள்ளிக் கல்வி துறையில் 5000 பணியிடங்கள் காலி அதிகாரி தகவல்.. (பத்திரிகை செய்தி)..


BREAKING NEWS - கல்வி செயலர் உதயச்சந்திரனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் வரை . எவரையும் மாற்ற கூடாது ..

கல்வி செயலர் உதயச்சந்திரனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை ...

நமது தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக _அரசு பள்ளிகள் சாதனை படைக்க_ முயற்சித்து வருகின்றன என்ற கூற்று உண்மையா...?*

👉ஆம் உண்மைதான்!!!
நமது இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மொத்தம் 352 மாணவர்கள் படிக்கின்றனர்.

2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP* 👇👇👇

August 10, 2017

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

August 08, 2017

கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு -சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி

'பள்ளிக் கல்வி துறையில், 155 நாட்களில், எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள, செயலர் உதயசந்திரனை மாற்றினால், அது, 1.5 கோடி மாணவர்களை பாதிக்கும்' என, கல்வியாளர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து

Social science lesson plan RMSA..

August 07, 2017

2017 ஆகஸ்ட் 09 (சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடித் திருவிழா) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான ஆசிரியர்களும், அதிக மாணவர்களுக்கு குறைவான ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆக.1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை அடிப்படையில் மீண்டும் பணி நிரவல் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவை உட்பட, நான்கு இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என, இரு குழுக்களை,

August 06, 2017

பாடங்களை படக் காட்சிகளாக பார்க்க அனைத்து பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’ அமைக்கப்படும் - தமிழக பாடத் திட்டக் குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தகவல்.


🔹 தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம். அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

🔸 இக்குழுவின் முதல் கூட்டம் சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கடந்த ஜூலை15-ல் நடத்தப்பட்டது.

தமிழக பள்ளி கல்வி துறை செயலர் உதயசந்திரன் மாற்றப்படுகிறாரா?


சென்னை: தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்டோ ஜியோ - சென்னையை அதிர வைத்த லட்சக்கணக்கான தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்... (பகுதி 3) தொடர்பாக இன்றைய (06.08.2017) நாளிதழ்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள்...




ஆகஸ்ட் 5 - சென்னையை அதிர வைத்த லட்சக்கணக்கான தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்... (பகுதி 2)


லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.




Click here to Video 👇



August 05, 2017

சென்னையை அதிர வைத்த லட்சக்கணக்கான தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்.. (பகுதி 1)


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிருந்தனர்.

இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ  (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) ஒருங்கிணைத்தன.


ஜாக்டோ - ஜியோ' பேரணிக்கு தடை : ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி..


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் பேரணிக்கு தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.

TNTEU - B.Ed./B.Ed.Spl. Results May/June 2017 RESULTS PUBLISHED... (2013-14, 2014-15 & 2015-16 Batch Only)



TNTEU - B.Ed./B.Ed.Spl. Results May/June 2017 RESULTS PUBLISHED...

 (2013-14, 2014-15 & 2015-16 Batch Only)


Click here to 👉 Results

August 04, 2017

RMSA - சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான 5 நாட்கள் (2017 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான) RMSA பயிற்சியின் முழுமையான தகவல் தொகுப்புகள் (RMSA District Level Training For Social Science Teachers 31-07-2017 to 4-08-2017) PDF & Videos வடிவில்...



RMSA District Level Training For Social Science Teachers (31-07-2017 to 4-08-2017)

Timetable:


2. Five Days Timetable for 9 -10 Teachers (Click Here)



  • FEEDBACK ( To fill the Feedback Form Please Click Here..Feed Back

☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆



Day 1        ( 31-07-2017)  Monday

For Reference Please click here (Day-1 )REFERENCE 


Session 1   ( 9.30 A.M. -10.30 A.M.)

    • Respected  School Education Secretary of Tamilnadu Mr.T.UDHAYACHANDRAN'S        address to the teachers

    வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்.

    இந்த மாதத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்  உள்ளது.வங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவுக்கு புதிய தலைவர்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான, சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு: தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

    தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்  என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

    August 02, 2017

    TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!

    அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு களில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்குப் பயன்படும் விதமாக தொடர்ந்து பல்வேறு குறிப்பு களையும், வழிகாட்டுதல்களையும் பாடத்திட்டங்களையும் இப்பகுதியில் பார்த்துவருகிறோம். அந்தவகையில் பொருளியல் பாடப்பிரிவின் ஒரு பகுதியாக வறுமை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இனி தொழிற்துறை பற்றி பார்ப்போம்.

    குடிமையியல் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடங்கள்

    TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது..

    பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான TNTET லிருந்து முழு விலக்கு தொடர்பான அரசாணை தமிழக அரசு விரைவில் வெளிவிடும்" என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை.