August 05, 2017

ஜாக்டோ - ஜியோ' பேரணிக்கு தடை : ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி..


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் பேரணிக்கு தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், 73 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, கோரிக்கை களை வலியுறுத்தி, ஜூலை, 18ல், மாவட்ட தலைநகரங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தியது.இரண்டாம் கட்டமாக இன்று, சென்னை மன்றோ சிலையிலிருந்து, கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கோட்டை நோக்கி பேரணி செல்ல, தமிழக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இதை அடுத்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த, ஜாக்டோ - ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.'அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்; அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும், ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் கூடக்கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்பது உள்ளிட்ட, 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், போராட்டத்தில் பங்கேற்க செல்வோரின் விபரங்களை, மாவட்டம், வட்டம் வாரியாக, போலீசார் சேகரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்