March 31, 2018

ஆதார் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் விவரங்களை சரிபார்க்க AIR TEL நிறுவனத்துக்கு மீண்டும் UIDAI அனுமதி அளித்துள்ளது.



SSA, RMSA, ஆசிரியர் கல்வி திட்டம் ஆகியவற்றை 1 ஏப்ரல் 2018 முதல் ஒன்றாக இணைத்ததுடன் ரூ. 75 ஆயிரம் கோடி நிதியையும் ஒதுக்கியது மத்திய அரசு. (நாளிதழ் தகவல்).



இந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு 2 கோடியே 80 லட்சம் நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.



2016 - 2017 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (31.03.2018) கடைசி நாள்.



தமிழகத்தில் வரும் (2018 - 2019) கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 1, 6, 9, +1 வகுப்புகளில் நடைமுறைக்கு வர உள்ளதால் அது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்பட வாய்ப்பு. (நாளிதழ் தகவல்).


March 28, 2018

இன்று (28.03.2018) நடைபெற்ற பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினாத்தாள் - ஆங்கில ஆசிரியர்களுக்கு 'ஷாக்'


ஆங்கிலத்தில் நடந்த 7 அதிசயங்கள்.

📝 Q.No.27 (Direct-Indirect)....
Statement and Imperative இரண்டையும் கலந்து கொடுத்தது இதுவே முதல்முறையாகும்.

📝 Q.No.28. (If clause)
Negative sentence முறையில் இப்போதுதான் இரண்டாவது முறையாக கேட்கப்பட்டுள்ளது.

வரும் (2018 - 2019) கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதால் அது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட வாய்ப்பு. (நாளிதழ் தகவல்).


March 27, 2018

தமிழகத்தின் வட மாவட்டங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் 2018 மே மாத இறுதியில் நடைபெற உள்ள ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட வாய்ப்பு.



பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்.


1, 6, 9 மற்றும் +1 வகுப்புகளுக்கு 3D, இணையதள லிங்க், பார்கோடு என பல புதிய நவீனங்கள் அடங்கிய வகையில் புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. (நாளிதழ் தகவல்).


HOW TO UPLOAD EKSTEP BUNDELD QUESTIONS.. EKSTEP இல் தயார் செய்த வினாக்களை BUNDLE செய்து அனுப்புவது எப்படி (தமிழ் வீடியோ)



March 26, 2018

Public Holidays for the year 2018 - Public Holiday for all Commercial Banks and Co-operative Banks on 01.04.2018 (Sunday) - Cancelled and declared on 02.04.2018 (Monday) - Orders issued. - G.O.Ms.No.202, Public (Miscellaneous) Dept., Date:26.03.2018.


வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை வருவதால் ஏப்ரல் 2 (திங்கட்கிழமை) தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது, மார்ச் 29, 30, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வங்கி சேவைகளை வங்கியில் வாடிக்கையாளர்கள் பெற இயலாது. [நாளிதழ் தகவல்].



வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை என்ற தகவல் தவறானது, மார்ச் 31 (சனிக் கிழமை) வங்கிகள் செயல்படும்.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.



🔸 8000 மாணவர் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

🔹 2,000 பேருக்கு நேரடியாகவும், 6,000 பேருக்கு டிஜிட்டல் முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் - தேர்வுக்கால பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - திருத்திய அரசாணை வெளியீடு. - அரசாணை (நிலை) எண். 51, பள்ளிக்கல்வித் (அ.தே.இ) த்துறை, நாள்:21.03.2018.


March 24, 2018

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். (நாளிதழ் தகவல்).


நாட்டின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117.5 கோடியாக சரிவு.



2017 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - தர வரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும், தேர்ச்சிக்கான சான்றிதழை வழங்க வேண்டும் உள்ளீட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (நாளிதழ் தகவல்).



+1 அரசு பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.



HOW TO CREATE EKSTEP MCQ QUESTION CREATE TAMIL

March 23, 2018

NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி கையேடு அ.தி.மு.க. வின் 'அம்மா கல்வியகம்' சார்பாக வெளியிடப்பட்டு உள்ளது, இதனை இலவசமாகவும் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


'அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது மானியம் அல்ல, ஊழியரின் பல ஆண்டு பணிக்கான உரிமை' என ஆதார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.


ஆதார் தகவல்களை திருடுவது சாத்தியமற்ற ஓன்று என உச்ச நீதிமன்றத்தில் UIDAI தெரிவித்து உள்ளது.



மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது பெறும் பணிக்கொடையை ₹ 20 லட்சம் வரை உயர்த்த வழிவகுக்கும் பணிக்கொடை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளாக பள்ளிக் கல்வித்துறையில் குறிப்பிடப்பட்டு உள்ள அம்சங்கள்.



March 22, 2018

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கும் வரை நீட்டிக்கப்படுகிறது - மத்திய தொலை தொடர்பு துறை தகவல்.



2018 ஏப்ரல் 03 (அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் பெருந் திருத்தேர்) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை (பள்ளி / கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும்). - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ல் இருந்து 62 ஆக அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் தகவல்.



நேற்று (21.03.2018) நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச்' 2018 தமிழ் இரண்டாம் தாள் வினாத்தாளில் வினாக்கள் எளிதாக இருந்தன, தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி. (நாளிதழ் தகவல்).


தொடக்கக் கல்வி - சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி அரசு துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரம் கோருதல் தொடர்பாக சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். (நாள்:-.03.2018).


March 20, 2018

+2 அரசு பொதுத் தேர்வு - நேற்று (19.03.2018) நடபெற்ற இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் எளிமையாக இருந்தன தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி (நாளிதழ் தகவல்).


தமிழக தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் மாநிலம் முழுவதும் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் 8,000 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.


March 18, 2018

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் வினாக்கள் கடினமானதாக இருந்ததாக மாணவர்கள் கருதுவதால் மாணவர்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.


2017 - 2018 ஆம் கல்வியாண்டில் 100 நடு நிலைப்பள்ளிகள் மற்றும் 100 உயர் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 2,723 (2,223 + 500) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 2,838 (1938 + 900) ஆக உயர வாய்ப்பு. (நாளிதழ் தகவல்).


சேலம் மாவட்டம் - 6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல்' 2018 - கால அட்டவணை வெளியீடு.



March 17, 2018

புதிய பாடத் திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம் பெறும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.


₹ 2000 நோட்டை திரும்ப பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய அரசு தகவல்.


தஞ்சாவூர் பெரிய கோயிலின் பொக்கிஷங்கள் பற்றிய கல்வெட்டுத் தகவல்கள். (நாளிதழ் தகவல்).



பிளாஸ்டிக் ₹ 10 ரூபாய் நோட்டு இந்தியாவின் 5 நகரங்களில் விரைவில் பரிசோதனை அடிப்படையில் புழக்கத்திற்கு வர உள்ளது - மத்திய அரசு தகவல்.



பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச்' 2018 தமிழ் முதல் தாள் மனப்பாடம் செய்து படித்த மாணவர்களுக்கு கடினம் ஆனால் பாடங்களை முழுமையாக புரிந்து படித்தவர்கள் சாதிக்கலாம் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து. (நாளிதழ் தகவல்).


மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு - மார்ச் / ஏப்ரல்' 2018 - விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி - விரும்பிய மையத்தில் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்குதல் தொடர்பான அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதம் (நாள்:15.03.2018)



March 16, 2018

இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் எப்படி இருந்தது ஒரு சிறப்பு பார்வை..

: *புதிய பாடத்திட்டம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் புளூ பிரிண்ட் படி வினாக்கள் கேட்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.புளூ பிரிண்ட் படி வினாக்களைக் கேட்பதால் மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் தெளிவுறப் படிப்பதில்லை.அதனால் நீட் தேர்வில் தோல்வியைத் தழுவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வினாக்கள் தயாரிப்பின் இம்மாற்றம் உண்டு என கல்வியியலாளர்கள்

March 15, 2018

தமிழக பட்ஜெட் 2018-19 - பள்ளிக் கல்வித்துறை - முக்கிய அம்சங்கள்: 100 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட உள்ளன.


தமிழக அரசுக்கு வரும் நிதியாண்டில் (2018 - 2019) கிடைக்கும் வருவாய் எவ்வளவு?



தமிழக அரசின் தற்போதைய வருவாய் நிலையும், வரும் நிதியாண்டில் கிடைக்கும் வருவாய் என்று கணக்கிடப்பட்டுள்ளதும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔸 வரும் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.14,45,227 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2018-19 - முக்கிய அம்சங்கள்.


Breaking News: தமிழக பட்ஜெட்டில் (2018 - 2019) துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரங்கள்.



💷₹ வருவாய் துறைக்கு 6.144 கோடி.

💶₹ குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி.

💴₹ நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி.

💵₹ பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி.