April 14, 2018

மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ..

தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், கல்வி ஆண்டு துவக்கத்தில், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

April 12, 2018

Pay Continuation Order: பள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (RMSA) கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8,462 தற்காலிக பணியிடங்கள் - 01-01-2018 முதல் 31-12-2018 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் -அரசாணை வெளியீடு. அரசாணை எண் 206, பள்ளிக் கல்வி [பக 5 (1) த்துறை, நாள்: 06.04.2018.


6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -அரசாணை வெளியீடு. 

Pay Continuation Order:

Go Ms No.50, 212, , 229, 287.


Breaking News: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 % (7 % ஆக) உயர்வு அரசாணை வெளியீடு.



Thanks to 🙏
புதிய தலைமுறை தொலைக்காட்சி

April 11, 2018

திருநெல்வேலியில் மகள் தேர்வு எழுதிய அறையில் பறக்கும்படை அதிகாரி தேர்வு நேரத்தில் நுழைந்தது ஏன்? பத்தாம் வகுப்பு கணித தேர்வில் முறைகேடு புகார் - கல்வித்துறை விசாரணை. (நாளிதழ் தகவல்).


தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.


+2 அரசு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல்' 2018 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (11.04.2018) தொடங்குகின்றன.



தமிழக மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் 9 மண்டலங்களில் உண்டு உறைவிட பயிற்சி மையங்கள் செயல்பட துவங்கியுள்ளன. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல்.



தமிழக அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக இருந்தது. இனி வீட்டுக்கடன் பெற 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் போதும் என அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. - G.O.(Ms)No.46, Housing and Urban Development (HBA) Department, Date:10.04.2018.


நேற்று (11.04.2018) நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணிதம் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் கருத்து. (நாளிதழ் தகவல்).



April 10, 2018

Flash News : ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு (TRB) புதிய தலைவராக ஜெயந்தி IAS நியமனம்.



பள்ளிக் கல்வி - 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்தமை - ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்டவர்கள் (Surplus Post with Person) விவரம் சரிபார்த்தல் தொடர்பான வேலூர் மாவட்ட CEO அவர்களின் செயல்முறைகள். (நாள்:-.04.2018).



தமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை. (நாளிதழ் தகவல்).



April 06, 2018

TNPSC - துறைத் தேர்வுகள் - டிசம்பர்' 2017 [Dept. Exam. - Dec' 2017] தேர்வு முடிவுகள் வெளியீடு. UPDATE on 11.04.2018.


 🔶தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு. 

 (நாள்: 11.04.2018)


தேர்வு முடிவுகளை அறிய  ⬇

2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 6 ஆயிரத்து 81 உயர்நிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 803மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. அதாவது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.

மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அரியலூர் 61, கோவை 3, கடலூர்82, தர்மபுரி11, ஈரோடு20, காஞ்சிபுரம்33, கரூர்3, கிருஷ்ணகிரி271, மதுரை2, நாகப்பட்டினம்145, பெரம்பலூர்19, புதுக்கோட்டை62, ராமநாதபுரம்8, சேலம்12, சிவகங்கை4, தஞ்சாவூர்33, நீலகிரி76, தூத்துக்குடி2, திருப்பூர்11, திருவள்ளூர்23, திருவண்ணாமலை381, திருவாரூர்70, திருச்சி3, வேலூர்335, விழுப்புரம்383, விருதுநகர்11 என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும், கணிதத்திற்கு 436 பணியிடங்களும், அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

April 01, 2018

பள்ளிக் கல்வித்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் SSA, RMSA திட்டங்களுடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் இணைத்து, புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய திட்டம், தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று (1 ஏப்ரல் 2018) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.



மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ல் இருந்து 62 ஆக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் அறிவித்து உள்ளார். (நாளிதழ் தகவல்).



தமிழகத்தில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.