December 30, 2017

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 01.12.2017 நிலவரப்படி 26 மாவட்டங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2084, பாட வாரியாக மற்றும் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அறிய...




வருமான வரி (Income Tax) சில மாற்றங்கள்..

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.


December 29, 2017

இனி SBI Bank-ன் செக் புக்குகள் செல்லாது!,...

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட 7 துணை வங்கிகளின் காசோலைகள் டிசம்பர் 31ம் தேதிக்கு மேல் செல்லாது என எஸ்பிஐ அறிவித்துள்லது.
மேலும் புதிய காசோலைகளை வாங்காதவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் காசோலைகளை புதிதாக வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு

December 28, 2017

Learning outcome கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு

..

Flash News: TN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள) ஆசிரியர்கள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. செங்கோட்டையன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு நாள்: 27.12.2017


Flash News: நீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த கல்வி ஆண்டே விலை இல்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🔹 நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Flash News: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 12 முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம், 6 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.



TNPSC CCSE-IV (GROUP-IV) தேர்வில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் TNPSC SHORT CUT MATHS.. முழு தகவல்கள் அடங்கிய புத்தகம் நீங்கள் பெற வேண்டுமா? ..

கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

1. எண்ணியல்

2. மீ.சி.ம. & மீ.பெ.வ.

3. விகிதம் & விகித சமம்

4. சதவீதம்

5. இலாபம் & நட்டம்

6. தனி வட்டி

7. கூட்டு வட்டி

8. சராசரி

9. ஆட்கள் & நாட்கள்

December 26, 2017

2018 ஜனவரி 02 உள்ளூர் விடுமுறை - இராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலின் ஆருத்திரா தரிசன திருவிழாவை முன்னீட்டு 02 ஜனவரி' 2018 இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


🔹 02.01.2018 உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 20.01.2018 பணி நாளாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ICT UPPER PRIMARY SYLLABUS .. (6,7,8)

டிசம்பர் 28 - திருச்சியில் TET நிபந்தனை ஆசிரியர்களின் சிறப்புக் கூட்டம்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

பட்டதாரி M.Phil படிப்பிற்காக இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பான தெளிவுரை.. (M.Phil)

December 25, 2017

Flash News: TN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள) ஆசிரியர்களுக்கு 2018 பிப்ரவரி மாதத்திற்குள் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் தரப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


     
                                        👇
   

Thanks to 🙏
புதிய தலைமுறை தொலைக்காட்சி

​அரசு பள்ளிகளில் பணிபுரியும்​ ​பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது​ ​தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..





​தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி​

கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு புதுமை பள்ளி விருது!மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் குழு அமைப்பு..

கற்பித்தல் முதல் கட்டமைப்பு வரை, சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப்பள்ளி', விருது வழங்க, திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு.....

நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

  மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார்  அவர்களும் கலந்து கொண்டார்.

December 21, 2017

DSE - ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. கடிதம் நாள்: 21.12.2017


8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில் அறிமுகம்..

அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணினி வழி தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பள்ளிகளில் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்துதல் என, பல புதிய திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
நன்றி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் - தமிழக அரசு..

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் - தமிழக அரசு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அரசாணையில்,
தமிழ்நாடு திறந்தநிலைப்

December 19, 2017

2018 ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்..

விடுமுறை நாட்கள்:​

01.2018 ஆங்கில புத்தாண்டு - திங்கட்கிழமை

14.01.2018 தை பொங்கல் - ஞாயிற்றுக்கிழமை

15.01.2018 திருவள்ளுவர் தினம் - திங்கட்கிழமை

December 11, 2017

SBI OLD IFSC AND NEW IFSC CODES ON 1300 BRANCHS LIST IN PDF FORMAT

Flash News: TRB - நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக TRB அறிவிப்பு. (Direct Recruitment of Lecturers in Govt Polytechnic Colleges - for the year 2017 - 18).

அரையாண்டு தேர்வு பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் விடைக்குறிப்பு.. 11.12.2017

தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்..

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை பாடல்கள், எளிய வார்த்தைகள் மூலமாக ஆங்கிலத்தை சரளமாகப் பேச வைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்னர் வெளியான புதிய வரைவுப் பாடத் திட்டம் குறித்து இணையதளம் மூலம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டன.

அதில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியிருந்தனர். இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கருத்தையும் பரிசீலித்து அதற்கான திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன்,

December 10, 2017

3 லட்சம் ஆசிரியர்களுக்கு சிக்கல் 'டெட்' தகுதி தேர்வை முடிக்க கெடு

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், பணியில் நீடிக்க, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, 2019 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்களை உஷார்படுத்தும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு

December 05, 2017

TET News: ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை (Review Petition) இன்று (05.12.2017) உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.


 Status / stage : Disposed (motion hearing fresh for admission) - Civil cases dismissed - order Date: 05.12.2017.

ஆசிரியர் பணிக்கு தகுதிப்படிப்பு அவசியம்;முதன்மை செயலர் பிரதீப் யாதவ் திட்டவட்டம்..

ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், மத்திய அரசின், தகுதிப்படிப்பில், வெற்றி பெறுவது அவசியம். இதில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப்யாதவ்

TN TET தாள் 2 தேர்வு: 2013 தேர்வில் சுமார் 30,000 + 2017 தேர்வில் 18,769 என மொத்தம் = சுமார் 48,769 நபர்கள் TNTET தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பணி வாய்ப்புக்காக பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். (நாளிதழ் தகவல் நாள்: 04.12.2017).



TET NEWS : தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2265 மட்டுமே உள்ளன.. - தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல். (CM cell) நாள்: 01.12.2017.



November 27, 2017

TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 195 பணி நாடுநர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய கலந்தாய்வு நாளை 28.11.17 நடைபெறுகிறது


தமிழகத்தில் தொடர் கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (27.11.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


இடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், பள்ளி அரையாண்டு தேர்வை,திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிச., 21ல், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தொகுதியிலும், சென்னை மாவட்டத்திலும், வரும், 27 முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு

November 26, 2017

ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.

ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .
அப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை.

மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் ?

✍🏻மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம்.

✍🏻அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.

✍🏻 தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும்  தண்டனையா?

✍🏻இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?

✍🏻தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவானை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?

✍🏻 ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க  பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா . 

✍🏻தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.
சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் .

✍🏻என்று உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.✍🏻

HOW TO CHANGE TPF A/C TO GPF A/C FORMAT..

November 21, 2017

how to covert word to pdf (tamil video)



School Visit Form in PDF format 4 pages..

Flash News: 2017 தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு - 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம் பாட வாரியாக வெளியீடு. (TN NEW DRAFT SYLLABUS 2017 -Class 1st std to 12th std.)

November 20, 2017

School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்.


🔴காலை வழிபாட்டுக் கூட்டம் ( As per G O )
🔴பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.

(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)

November 18, 2017

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்..

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

November 17, 2017

Flash News: SSA - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 20.11.2017 முதல் 30.11.2017 முடிய நடைபெற இருந்த "கற்றல் விளைவுகள்" (Learning outcomes training) பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும். - SSA மாநில திட்ட இயக்குநர் தகவல்.


பள்ளிக் கல்வி - 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் 150 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதரப் படிகள் பெறுதல் - ஊதியம் பெற விரைவு ஊதிய ஆணை (Express Pay Order) நாள். 17.11.2017.


November 16, 2017

மொபைல் - ஆதார் இணைப்பு : 3 புதிய வசதிகள் அறிவிப்பு

பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.

'குரூப்'குரூப்- 4' தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?

அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, 'குரூப் - 4' தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு

November 15, 2017

மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள்

அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் வரித்தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர்,
என மொத்தம் 9,351

November 14, 2017

TNPSC GROUP 4 OFFICIAL NOTIFICATION PUBLISHED 14.11.2017

தமிழகம் முழுதும் 1000 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை .. மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் அபாயம்!!


ESLC எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவிப்பு வெளியீடு..

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' : தேர்தல் கமிஷன் முடிவு!!!

 வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு
ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

November 12, 2017

HOW TO DOWNLOAD VOTERS LIST ON WEBSITE...


11ஆம் வகுப்பு வரலாறு படத்திற்கான மெல்ல கற்போர் கையேடு (minimum study material).


ஒரு மதிப்பெண் வினாக்கள்

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

மூன்று மதிப்பெண் வினாக்கள்

ஐந்து மதிப்பெண் வினாக்கள்




Thanks To:
அறிவழகன். M.A., M.Phil., M.Ed.,
அரசினர் மேல்நிலைப் பள்ளி,
வளையாத்தூர்.
வேலூர் மாவட்டம்.

TET - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 க்கும் பின்னர் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமன ஆணை பெற்றவர்கள் - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி நிபந்தனை - தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குவது தொடர்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 08.11.2017).