December 21, 2017

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் - தமிழக அரசு..

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் - தமிழக அரசு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அரசாணையில்,
தமிழ்நாடு திறந்தநிலைப்
பல்கலைக்கழக பதிவாளரின் கருத்துருவினை ஆய்வு செய்த பின் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம் அல்லது பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள், அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்