February 28, 2018

அரசு பொதுத் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியை சார்ந்த எந்த ஒரு பணியாளரும் [பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட எவரும்] தேர்வு மைய வளாகத்தில் காலை 8.30 மணிக்குமேல் இருக்கக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல். (நாளிதழ் தகவல்).



தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் துறை முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றமைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு அனுமதி - சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரம் வழங்க கோருதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: 28.02.2028).


February 27, 2018

தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டு உள்ள நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் அரசுப் பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு மீண்டும் செயல்படும். (நாளிதழ் தகவல்).



சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி கல் மற்றும் ஏற்காடு மலையில் கே.புத்தூர் கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. (நாளிதழ் தகவல்).



சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலை கிராம பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை... (நாளிதழ் தகவல்).



புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக முதல் கட்டமாக 500 ஆசிரியர்களுக்கும், பொதுத் தேர்வு முடிந்ததும் 2 லட்சம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.


5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'பாலர்' ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது - UIDAI தகவல்.



தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 250 க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளன.


February 26, 2018

தமிழகத்தில் 10, +1 மற்றும் +2 வகுப்புகளில் அமலில் இருந்த பொதுத் தேர்வுக்கான 'ப்ளூ பிரிண்ட்' முறை புதிய பாடத்திட்டத்தில் ரத்து செய்யப்பட வாய்ப்பு.


🔹 தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 5 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; + 1, + 2 க்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.

🔸 கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

February 23, 2018

Flash News: இந்த கல்வியாண்டு (2018 - 2019) முதல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் [TN - BE Admissions to be conducted through online counselling), இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கல்லூரிகளை தேர்வு செய்யலாம். - தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தகவல்.


ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்


ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யின் தேர்வு வாயிலாக, இவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

February 22, 2018

AIRCEL நிறுவன டவர் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? சேவை சீரடைவது எப்போது? - AIRCEL தென்னிந்திய CEO சங்கர நாராயணன் தகவல்.


பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களின் கல்வி இணை மற்றும் புறச்செயல்பாடுகளை ஊக்குவித்தல் - மதிப்பீடு செய்ய வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளில் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குவது குறித்து திருத்தம் - அரசாணை வெளியீடு - அரசாணை (2டி) எண்.13, பள்ளிக்கல்வித் (ஜிஇ 1)த் துறை, நாள்:20.02.2018.


Flash News: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த TRB யின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.


February 20, 2018

திருநெல்வேலி அருகே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தகவல்.



பொது மாறுதல் 2017 - 2018 - SSA - மாநில மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் கலந்தாய்வு (350 பணியிடங்கள்) - உரிய அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், நாள்:20.02.2018.


கலந்தாய்வு நாள்: 23.02.2018, 

நேரம். 1.00 மணி.

Flash News: தமிழக அரசுப் பணிகளில் தேவையற்ற பணியிடங்களை நீக்குவது தொடர்பாக பரிந்துரைக்க குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. - G.O. Ms. No.56, Finance (CMPC) Department, Date:19.02.2018.


 Constitution of Staff Rationalisation Committee – Appointment of Chairman and Terms of Reference – Orders – Issued. G.O.Ms.No.56 Dt: February 19, 2018.

🔹 ஓய்வு பெற்ற IAS  அதிகாரி திரு. ஆதி சேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

🔸 6 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என பரிந்துரை குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

🔹 பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர் கட்டமைப்பை ஆய்வு செய்வதற்க்கும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


Flash News: அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 7 வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய "ஒரு நபர் குழுவை" அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - G.O. Ms.57, Finance (Pay Cell) Department, Date:19.02.2018.


Tamil Nadu Revised Pay Rules, 2017– Requests for rectification of pay anomalies – Constitution of One Man Committee – Orders –Issued. FINANCE (PAY CELL) DEPARTMENT - G.O.Ms.No.57, Dated: 19th February, 2018.

திரு. M.A. சித்திக், I.A.S. அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழு 31.07.2018 அன்று தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கும்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அரசு உயர்நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் தற்போது பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,223 மட்டுமே உள்ளன. (நாளிதழ் தகவல்).



தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் 318 அரசுப் பள்ளிகளுக்கு இலவச இணையதள (Wi-Fi) வசதி வழங்கப்பட உள்ளது. . - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.


February 18, 2018

ரூ. 1, ரூ. 2 நாணயங்களையும் சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற எந்த ஒரு வங்கிக்கிளையும் மறுக்க கூடாது, நாணயங்களை ஏற்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். - RBI தகவல்.


முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வில் வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'கிராஸ் மேஜர், சேம் மேஜர்' பிரச்சனையால் 3 ஆண்டுகளாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறவில்லை. (நாளிதழ் தகவல்)


பள்ளி மாணவ, மாணவியர்களின் மன அழுத்தத்தை போக்க 24 மணி நேர 'ஹெல்ப் லைன்' சேவையை தமிழக முதலமைச்சர் பிப்ரவரி 19 அன்று தொடங்கி வைக்க உள்ளார். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.


14 விதமான ரூ.10 நாணயங்கள் 10 மற்றும் 15 வரிகளுடன் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே செல்லத்தக்கது ஆகும். - RBI தகவல்.


அரசு பள்ளி கட்டிடங்களை விரிவாக்கம் செய்ய தனது ரூ. 4 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமதி. பொன்மணிதேவி.


அரசு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல்' 2018 தேர்வை கண்காணிக்க மாவட்டம் தோறும் ஒரு அதிகாரி வீதம் 31 அதிகாரிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை நியமனம் செய்து உள்ளது.


தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல்விளக்க மெஷின்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.



February 14, 2018

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் எதிர்பாராத விபத்துகளினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் அரசாணை வெளியீடு - அரசாணை எண்.17, பள்ளிக் கல்வித் [பக(52)] துறை, நாள்:07.02.2018 .




TN CM Special Cell Reply - தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அரசு உயர்நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் தற்போது பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,223 மட்டுமே உள்ளன. - தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல். (நாள்: 12.02.2018).


தமிழ்நாடு மேல்நிலை கல்விப்பணி - முதுகலை ஆசிரியர் (வரலாறு) பதவி உயர்வின் போது பின்பற்றப்படுகின்ற 1:3 [1 ஒரே பாடம்] [3 வேறு பாடம்] என்ற முரண்பாடான முன்னுரிமை வழங்கும் (அரசாணை எண்.266 / 18.10.2000) அரசாணைக்கு எதிரான சென்னை & மதுரை உயர்நீதிமன்ற வழக்குகள் / தடையாணைகளை விரைந்து முடித்து வரலாறு (முதன்மை) பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டுதல் சார்பு - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல் நிலைக்கல்வி) அவர்களுக்கு தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் நகல். (நாள்:15.02.2018).


February 13, 2018

TN CM Special Cell Reply - சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழக தொலைதூர அஞ்சல் வழியில் பயின்ற பட்ட படிப்புகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசாணை இல்லை. - தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல். (நாள்: 13.02.2018).



+2 - அரசு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல்' 2018 - தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம் 14.02.2018 அன்று மட்டும் பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம். (நாள்:12.02.2018).



அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணை - தமிழக அரசு வெளியீடு.


பத்தாம் வகுப்பு - அரசு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல்' 2018 - பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள். (நாள்:07.02.2018).



பள்ளிகளின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் உறுதி.


February 11, 2018

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கான 'ஹெல்ப் லைன்' சேவை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.



தமிழகம் முழுவதும் அனைத்து சார்ப்பதிவு அலுலகங்களிலும் பிப்ரவரி 13 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது.


TNPSC வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நேரத்தில் 20.7 லட்சம் நபர்கள் இன்று (11.02.2018) குரூப்-4 தேர்வை எழுத உள்ளனர்.



February 10, 2018

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணி புரிய முதுகலைப் பட்டப் படிப்புடன் இனி NET அல்லது SET தகுதிப் பெற்றிருப்பது கட்டாயம். - UGC அறிவுறுத்தல்.



Flash News: தமிழகத்தில் வரும் கல்வியாண்டு (2018 - 2019) முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9, 10, +1 மற்றும் +2 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.



திருப்பத்தூர் அருகே 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கோட்டம் கண்டெடுப்பு. (நாளிதழ் தகவல்).



+1 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பிப்ரவரி 13 முதல் 'ஹால் டிக்கெட்'யை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்.


ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முகவரி மற்றும் வயதுச் சான்றாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும். - மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தகவல்.



TNPSC வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 20.7 லட்சம் நபர்கள் நாளை (11.02.2018) குரூப்-4 தேர்வை எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.



February 09, 2018

Breaking News: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (16 செப்டம்பர்' 2017) ரத்து செய்யப்படுகிறது, மறுதேர்வுக்கான அறிவிக்கை மே' 2018 முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். - TRB அறிவிப்பு.



தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்:08.02.2018).