February 21, 2018

மொபைல் எண்கள் 13 இலக்க எண்களாக மாற உள்ளது என்ற தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. - மத்திய தொலைத் தொடர்புத்துறை விளக்கம்.




Thanks to 🙏
பாலிமர் நீயூஸ் தொலைக்காட்சி


Thanks to 🙏
தந்தி தொலைக்காட்சி

📲 இனி மொபைல் எண்கள் (M2M) 10 இலக்கத்திலிருந்து 13 இலக்கமாக மாற்றம் செய்யப்படுவதாக வந்த செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.


- மத்திய தொலைத் தொடர்புத்துறை விளக்கம்.

            ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆

மொபைல் எண்களை 13 இலக்கமாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என தொலைத்தொடர்புத்துறை விளக்கம்,

வரும் ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அக்டோபர் முதல் ஏற்கெனவே உள்ள 10 இலக்க மொபைல் எண்களும் 13 இலக்க மொபைல் எண்களாக மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத்துறை இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.




இந்நிலையில், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என தொலைத்தொடர்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. தொழிற்துறை பயன்பாடுகளுக்கான Smart Metering, Asset Tracking Solutions, Equipment Monitoring Solutions போன்ற சிம் அடிப்படையிலான எம்2எம் சாதனங்களுக்கு மட்டுமே 13 இலக்க எண் வழங்கப்பட உள்ளதாகவும், வழக்கமான மொபைல் பயன்பாடுகளுக்கு 10 இலக்க எண்களே தொடரும் என தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்