February 23, 2018

ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்


ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யின் தேர்வு வாயிலாக, இவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.




இவர்கள் தங்களுக்கு, ஆசிரியர் பணி வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் பயிற்றுனர்கள், 385 பேருக்கு, ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' இன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது.'முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்ற அனைவரும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.

பணி மாறுதல் வேண்டாம் என்றால், கவுன்சிலிங்கில் பங்கேற்ற பின் தெரிவிக்கலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்