November 26, 2017

ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.

ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .
அப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை.

மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் ?

✍🏻மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம்.

✍🏻அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.

✍🏻 தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும்  தண்டனையா?

✍🏻இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?

✍🏻தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவானை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?

✍🏻 ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க  பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா . 

✍🏻தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.
சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் .

✍🏻என்று உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.✍🏻

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்