March 15, 2018

தமிழக அரசுக்கு வரும் நிதியாண்டில் (2018 - 2019) கிடைக்கும் வருவாய் எவ்வளவு?



தமிழக அரசின் தற்போதைய வருவாய் நிலையும், வரும் நிதியாண்டில் கிடைக்கும் வருவாய் என்று கணக்கிடப்பட்டுள்ளதும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔸 வரும் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.14,45,227 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


🔹 தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.16,89,459 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

🔸 மத்திய வரிகளின் பங்கு ரூ.31,707 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

🔹 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர படிகளுக்கு ரூ.52,171 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

🔸 ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்கு ரூ.25,362 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

🔹 மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் ரூ.11,301 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

🔸 வாகனங்கள் மீதான வரி வருவாய் ரூ.6,211 கோடியாக இருக்கும்.

🔹 மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,12,616 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

🔸 ஆயத்தீர்வை வருவாய் ரூ.6,997 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.

🔹 மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.98,689 கோடியாக உள்ளது. இது வரும் நிதியாண்டில் ரூ.1,12,616 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

🔸 முத்திரைத்தாள், பத்திரப்பதிவு கட்டணம் ரூ.10,935 கோடியாக இருக்கும்.

🔹 வருவாய் பற்றாக்குறை ரூ.17,490 கோடியாக இருக்கும்.

🔸 மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,76,251 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்