March 16, 2018

இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் எப்படி இருந்தது ஒரு சிறப்பு பார்வை..

: *புதிய பாடத்திட்டம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் புளூ பிரிண்ட் படி வினாக்கள் கேட்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.புளூ பிரிண்ட் படி வினாக்களைக் கேட்பதால் மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் தெளிவுறப் படிப்பதில்லை.அதனால் நீட் தேர்வில் தோல்வியைத் தழுவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வினாக்கள் தயாரிப்பின் இம்மாற்றம் உண்டு என கல்வியியலாளர்கள்
கூறினார்கள்.அதன் படியே நடந்து விட்டது போலுள்ளது.*                "10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் 2017-18-ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற்றது.
இன்று எழுதிய மொழிப்பாடத்தேர்வின் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகத் தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வில் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் கேள்விகள் வழக்கமாகப் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஆனால், இந்தாண்டு அந்த கேள்விப் பட்டியலில் இல்லாது, பாடத்துக்குள் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் விடையளிக்க சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்." - 10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை ...

வினாக்கள் அனைத்தும் நேரடியாக கேட்கப்படவில்லை...

போட்டித்தேர்வு பாணியில் புத்தகம் முழுக்க படித்து புரிந்த மாணவர் விடையெழுதும் வகையில் இருந்தது...

நுட்பமாகவும் சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமைந்தது...

வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை கூர்ந்து கவனித்து உள்வாங்கியதை விடையளிக்கும் நிலையில் இருந்தது...

அரசால் நடத்தப்பட்ட வழங்கப்பட்ட திருப்புத்தேர்வு வினாத்தாளிலிருந்து கூட வினாக்கள் வரவில்லை..

மாதிரிவினாத்தாள் முறைப்படி யும் வினாக்கள் கேட்கப்படவில்லை...

தற்போது 11ம்வகுப்பு மாணவர்க்கு எவ்வாறு வினாத்தாள் கேட்கப்பட்டதோ அதைப்போலவே தேடி எடுக்கப்பட்டுள்ளது...

கடந்த கால வினாத்தாளிலிருந்து பெரும்பான்மையான வினாக்கள் கேட்கவில்லை..

வரிக்கு வரி பாடங்களை படித்து வினாவாக மாற்றி ,விடைகளை படிக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு போல இருந்தது...

வினாத்தாள் திட்டவரைவு blue print உள்ளபடி அதற்குப்பட்ட பாடங்களிலிருந்து கேள்வி கேட்கப்பட்டது ஆனால் நேரடி மாதிரிபுத்தக வினாக்களை கேட்கமால் ,பாடப்பகுதியின் உள்ளிருந்து சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருந்தது...

மொத்தத்தில் இந்த வினாத்தாள் 
மிகவும் பின்தங்கிய ,திறன்குறைந்த மாணவர்க்கு கடினமாகவே இருக்கும்...

மனப்பாட முறையை மாற்றி , மாணவர் சுயமாக விடையளிக்கும் முறையில் கேள்வி வந்தது..
நமக்கு மகிழ்ச்சியே...
ஒரு மாற்றத்திற்க்கான முதல்முயற்சி...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்