August 14, 2017

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் விரைவில் நியமனம்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன.

கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு நடத்தி நிரந்தரம் செய்யப்பட்டனர்;பல பள்ளிகளில் இதற்கு ஆசிரியர்கள் இல்லை.தற்போது இப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயிற்றுனர் (கம்ப்யூட்டர் அறிவியல்) மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி., பி.எட்., - பி.சி.ஏ., பி.எட்.,- பி.இ., பி.எட்., எனகல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 748 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர். இதுவரை கம்ப்யூட்டர் பாடப்பிரிவு வகுப்புகள் இல்லாத பள்ளிகளில், துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்