August 08, 2017

கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு -சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி

'பள்ளிக் கல்வி துறையில், 155 நாட்களில், எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள, செயலர் உதயசந்திரனை மாற்றினால், அது, 1.5 கோடி மாணவர்களை பாதிக்கும்' என, கல்வியாளர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து
உள்ளனர்; 'அவரை மாற்றக் கூடாது' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு - சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி

தமிழக பள்ளிக் கல்வி துறை, பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றாமலும், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறாமலும், தடுமாறி வந்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தும், எந்த மாற்றமும் நிகழாமல் இருந்தது.

பாராட்டு :

இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையனும், செயலராக உதயசந்திரனும் பொறுப்பேற்ற பின், தேசிய அளவில், தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு, புதிய பிம்பம் கிடைத்து உள்ளது. 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமே, தமிழக அரசின் முயற்சியை பாராட்டி உள்ளது. மார்ச், 6ல், பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயசந்திரன்,அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை படி, நேற்று வரையிலான,155 நாட்களில், எண்ணற்ற பணிகளை துறையில் செய்துள்ளார்.இந்நிலையில், பெற்றோர், மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், செயலர் உதயசந்திரனை இடம் மாற்றம் செய்ய, முதல்வர் பழனிசாமி அரசிடம், சிலர் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பல்கலை துணைவேந்தர்கள், பள்ளி தாளாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் பேரவையினர் என, அனைத்து தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'செயலர் உதயசந்திரனை மாற்றக்கூடாது' என, அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்; இதுதொடர்பாக, அரசுக்கு கடிதங்களும் எழுதி வருகின்றனர்.

துவக்கம்:

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய அளவில், 'கோமா' நிலையில் இருந்த, தமிழக பள்ளிக் கல்வி துறை, அதிலிருந்து மீண்டு, நாட்டிற்கு முன்மாதிரியாக மாறுவதற்கான பயணத்தை துவக்கி உள்ளது. தற்போது, நடுவழியில் கப்பலை கவிழ்த்து விடுவது போல, பள்ளிக்கல்வி செயலரை மாற்றும் முயற்சியில், அரசியல்வாதிகளும், வணிக நோக்கில் செயல்படும் ஏஜென்டுகளும், அரசுக்கு அழுத்தம் தருவது தெரிய வந்துள்ளது. அவர் மாற்றப்பட்டாலோ அல்லது அவரதுசெயல்பாடுகளை முடக்கினாலோ, தமிழகத்தில் படிக்கும், 1.5 கோடி மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இது போன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். மாறாக, சுய கவுரவம், லஞ்சம், ஊழலில்ஈடுபடுவதற்காகவும், யாரையாவது திருப்திபடுத்தவும், அவரை மாற்ற முயற்சித்தால், முதல்வர் பழனிசாமியின் அரசு, மாணவர்களுக்கு துரோகம் இழைப்பதாகி விடும். எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரனின் கூட்டுப் பணி, துறையில் தொடர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டணியின் 155 நாள் சாதனைகள் :

* பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தனியார் பள்ளிகள், வியாபார பொருளாக பயன்படுத்திய, மாநில, மாவட்ட, 'ரேங்க்' முறை, அதிரடியாக ஒழிக்கப்பட்டது.
* மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார்பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவச இடம் பெற, 'ஆன்லைன் அட்மிஷன்' முறை கொண்டு வரப்பட்டது.
* புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து, பாதி பாடம் முடிந்த பின், ஆகஸ்டில் ஆசிரியர்களை இட மாற்றம் செய்யும் கவுன்சிலிங் முறை ஒழிக்கப்பட்டு, கல்வி ஆண்டு துவங்கும் முன்னரே, வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
* 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும்; 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், ஆன்லைன் விண்ணப்ப முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு முறையும், விரைவில், 'ஆன் லைன்' மயமாகிறது.
* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் திட்டமிட்டு படிக்கும் வகையில், பள்ளி திறக்கும் நாளிலேயே, பொது தேர்வு நடக்கும் தேதியும், தேர்வு முடிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மதிப்பெண் சான்றிதழ்களின் விபரங்கள், தமிழில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்களை, மத்திய அரசின் டிஜிட்டல் இணையதளத்தில்,பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா நுாலக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, முதல் முறையாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடிப்பிடித்து, விருதுக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிடப்பில் போடப்பட்ட, சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட்ட

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்