August 25, 2017

பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய முதன்மை செயலர்!

தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலராக பிரதீப் யாதவை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் கல்வி துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களை
அறிவித்து வந்தார். இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனுக்கும் உதயச்சந்திரனுக்கும் இடையில் நீண்ட நாள்களாக பனிப்போர் நிலவி வருவதாகக் கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது.  இதனால் பள்ளிக் கல்வித்துறைக்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் பரவியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பள்ளிக் கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலராக பிரதீப் யாதவ்  நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கூடுதலாக முதன்மை  செயலர் பதவியை உருவாக்கி அந்த பொறுப்புக்கு பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில், தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன், அவருடைய  பொறுப்பில் நீடிப்பார் என்றும், பிரதீப் யாதவுக்கு கீழ், உதயச்சந்திரன் பணியாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு துறைக்கு இரண்டு செயலர் என்ற விநோத நடவடிக்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. உதயச்சந்திரன் கல்வி துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களை அறிவித்து வந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்