August 06, 2017

தமிழக பள்ளி கல்வி துறை செயலர் உதயசந்திரன் மாற்றப்படுகிறாரா?


சென்னை: தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதேநேரத்தில் இந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டங்களுக்கு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முடங்கிக் கிடந்த சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சீரமைக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய எண்ணற்ற அதிரடி மாற்றங்களுக்கு பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன்தான் காரணம். மேலும் புதிய மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தொடங்குவதை எளிமைப்படுத்த ஆன்லைனில் அனுமதி பெறுவதையும் நடைமுறைப்படுத்தினார் உதயசந்திரன்.
இந்நிலையில் திடீரென உதயசந்திரனை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய பள்ளி கல்வித் துறை செயலராக பிரதீப் யாதவ் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்