August 04, 2017

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு: தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்  என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


தொடக்க  கல்வித்துறையில் ஆசிரியர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் பணியில் காணப்பட்ட குறைபாடுகள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை  சேகரிக்கவேண்டும்.

தொகுப்பு அறிக்கை தயாரிக்கும்போது தமிழ்நாடு குடிமுறைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17, 17அ,  17ஆ,17இ-யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரங்களும் பணியில் ஒழுங்கீனம் காரணமாக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட  ஆசிரியர்களின் விவரங்களும் சேகரிக்க வேண்டும்.எவ்வித விவரங்களும் விடுபடாமல், தனித்தனியாக மாவட்ட அளவில் தொகுத்து 2012-2013 முதல் 2016-2017ம் ஆண்டுகளின் விவரங்களை சேகரித்து  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை எவ்வளவு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும், இதன்மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்