Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
June 30, 2017
TN TET - 2017 (ஆசிரியர் தகுதித் தேர்வு - 2017) தாள் 1 & 2 தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி செய்யப்பட்ட விடைக் குறிப்புகள் வெளியீடு - TRB.
Click here Final Key Answers
Click here for Individual Candidate Query
2017 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என மாநில தேர்தல் ஆணையர் தகவல்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக, மாநில தேர்தல் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான்
தெரிவித்தார்.
10, 12 அரசு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த 3,000 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இன்று (30.06.2017) நள்ளிரவு பாராளுமன்றத்தில் GST வரி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுக விழா நடைபெறுகிறது, நாளை (ஜீலை 1) முதல் GST வரி நடைமுறைக்கு வருகிறது.
🔸 பாராளுமன்றத்தில் இன்று (ஜூன் 30) GST வரி அறிமுக நிகழ்ச்சி, விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔹 நாளை (ஜூலை-1) ஜி.எஸ்.டி அமலாவது குறித்து இன்று நள்ளிரவு பார்லிமென்ட்டில் அறிவிக்கப்படுகிறது.
🔸 இன்று இரவு 11 மணிக்கு ஜி.எஸ்.டி குறித்து பாராளுமன்றத்தில் குறும்படம் திரையிடப்படுகிறது.
🔹 11.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.
🔸குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 11.45 மணிக்கு பேசுகிறார்.
🔹 நள்ளிரவு 12 மணிக்கு ஜி.எஸ்.டி அமல் குறித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பார்.
June 29, 2017
7வது ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. - OFFICIAL COMMITTEE – Constitution of an Official Committee to examine the revision of Pay scales / Pension to the State Government employees and pensioners following the decisions of the Central Government on the recommendations of the Seventh Central Pay Commission extension to 30.9.2017 – Orders Issued. [G.O.Ms.No.189, Finance (Pay Cell) Dept. Date: 27.06.2017].
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
✳ தமிழக பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
✳ சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
🔸 தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?
🔹 அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.
குஜராத்தில் 850 மாணவர்களின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரத்து: 2+2+2=? இதற்கு பதில் தெரியாததால்!
குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை எழுதிய 850 மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுமார் நூறு நூறு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
2018 ஜனவரி மாதத்துக்குள் 1முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார் - SCERT இயக்குனர் க . அறிவொளி தகவல்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க. அறிவொளி கூறுகையில்,
🔹 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது.
🔸 இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
June 28, 2017
தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் அவர்களது தமிழக ஆசிரியர்கள் தொடர்பான சிறப்புமிகுந்த பேருரைகள். (4 Parts - Videos Link)
Click here to Videos Link 👇
பாகம் - 1
பாகம் - 2
June 27, 2017
FLASH NEWS: அரசு பள்ளி ஆசிரியர்கள் தனது குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி. (புதிய தலைமுறை TV - NEWS Video LINK)
தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Click here to புதிய தலைமுறை TV NEWS - LINK 👇
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு பள்ளியில் தொடங்கிய ஆங்கிலவழி வகுப்புகளை தமிழ்வழி ஆசிரியரே நடத்துகிறார் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பகுதி நேர தொழில் செய்வது வேதனை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை அரசு கட்டாயம் ஆக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்பை நடத்துகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு வராத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ளார்.
மேலும் ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்க கூடாது ?
ஆசிரியர்களின் வருகையை CCTV கேமரா கொண்டு கண்காணிக்காதது ஏன் என்றும் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்.
தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? -
ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? -
2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது - நீதிபதி கிருபாகரன்.
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆
தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்..
👉 அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்..
1) அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?
2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?
3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?
4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?
5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?
7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?
8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?
9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?
10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.
11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?
12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?
13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?
14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?
15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?
17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
19) மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?
20) அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் MBBS படிப்பிற்கான Applications கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!
2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.
Flash News: கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.06.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.06.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
'தமிழக அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்; 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் துவங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
June 26, 2017
ஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்கள் கருத்து
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் வரி விதிப்பு, கணக்கியல் உள்ளிட்ட துறைகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
June 25, 2017
MBBS சேர்க்கை தமிழகத்தில் எப்படி நடைபெற உள்ளது. - தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் விளக்கம்.
தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு, இரண்டு வகையான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அவை முறையே, அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு பல் மருத்துவ கல்லூரி, சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள், அரசுக்கு ஒப்படைத்துள்ள இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.