June 30, 2017

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டார்.



🔸 தரவரிசையில் மாணவி கிருத்திகா முதலிடம் பெற்றார்.

🔹 முறையே, சௌமியா - 2ம் இடமும், ஆர்த்தி - 3ம் இடமும் பிடித்தனர்.


🔸 கால்நடை மருத்துவ படிப்பில் இந்தாண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் திலகர் அறிவித்தார்.

🔹 மேலும், "கலந்தாய்வு அடுத்தமாதம் (ஜூலை) 19-ந் தேதி தொடங்கி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

🔸 மொத்தம் 380 மாணவர்கள் சேர்க்கப்படுவர், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் விண்ணப்பித்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

🔹 இந்த ஆண்டு புதிய படிப்பு எதுவும் இல்லை. அதேபோல புதிய கல்லூரிக்கும் வாய்ப்பு இல்லை.

🔸 தனியார் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் திட்டமும் இல்லை" என்றும் திலகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்