தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு, இரண்டு வகையான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அவை முறையே, அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு பல் மருத்துவ கல்லூரி, சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள், அரசுக்கு ஒப்படைத்துள்ள இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.
🔸 தமிழகத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சிதம்பரத்தில் உள்ள, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியையும் சேர்த்து, மொத்தம், 3,050 இடங்கள் உள்ளன.
அதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதம், அதாவது, 456 இடங்கள் ஒதுக்கப்படும்.
🔹 மீதம், 2,594 இடங்கள் உள்ளன. தமிழக அரசின் சட்ட முன்வடிவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் தரா விட்டால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, 85 சதவீத இடங்கள், தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
🔸 அதில், 15 சதவீதம், அதாவது, 391 இடங்கள், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., மற்றும் பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு, 'நீட்' மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
🔹 மீதமுள்ள, 2,203 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
🔸 மாநில அரசு ஒப்புதல் பெற்ற, 10 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், அரசுக்கு, 783 இடங்கள் ஒப்படைக்கப்படும். அதில், 85 சதவீதமான, 664 இடங்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், மீதமுள்ள, 15 சதவீதமான, 119 இடங்கள், சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., மற்றும் பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
🔹 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், ஜூன், 27 முதல், ஜூலை, 7 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஜூலை, 8 கடைசி நாள்.
🔸 மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு தீர்வு கூற, சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில், தகவல் மையம், துவக்கப்படும். மையம் துவக்கிய பின், தொடர்பு எண் அறிவிக்கப்படும்.
🔹 ஜூலை, 14ல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, மாநில பாடத்திட்ட மாணவர்களின், தகுதி பட்டியல் வெளியிடப்படும்.
🔸 இட ஒதுக்கீட்டில், ஏற்கனவே உள்ள நடைமுறை பின்பற்றப்படும். அதன் முழு விபரம், விரைவில் அறிவிக்கப்படும்.
🔹 அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாநில கவுன்சிலிங்கிற்கும் விண்ணப்பிக்கலாம்.
🔸 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கும், மாநில மருத்துவ கல்வி இயக்குனரகமே, கவுன்சிலிங் நடத்தும்.
🔹 நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், மத்திய சுகாதாரப்பணி இயக்குனரகம் மூலம் நடைபெறும்.
🔸 மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை, அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
🔹 இதற்கு சட்ட பாதுகாப்பு வழங்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
🔸 மத்திய பாடத் திட்ட மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டே, இம்முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்