June 29, 2017

குஜராத்தில் 850 மாணவர்களின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரத்து: 2+2+2=? இதற்கு பதில் தெரியாததால்!

குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை எழுதிய 850 மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுமார் நூறு நூறு
மாணவர்களாக அழைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. அப்போது, 10ம் வகுப்பு தேர்வில் 50 மதிப்பெண்ணுக்கு 40-49 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்திருந்த மாணவ, மாணவிகளில் பலருக்கு 2+2+2=? என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியாததும், 'Cricket' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஸ்பெல்லிங் தெரியாததும், பல மாணவ, மாணவிகள் குஜராத்தின் தலைநகர் என்ன என்ற கேள்விக்கு விடை எழுதாமல் விட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

 இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் டஹோத், டாபி, சௌராஷ்டிரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 850 மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்விகளுக்குக் கூட இந்த மாணவ, மாணவிகளால் பதிலளிக்க முடியாததால்தான் இவர்களது தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், எந்த வகையில் முறைகேடு நடந்தது என்பது குறித்த ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சரியான பதிலை எவ்வாறு எழுதினார்கள் என்பது மர்மமாகவே இருப்பதாகவும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த தேர்வு மையங்களில் இருந்த சிசிடிவி பதிவுகளில், பெரிய அளவில் காப்பி அடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்