June 28, 2017

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்... (NEWS 7 TV - Video LINK)

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.

Click here to NEWS 7 TV - Video LINK 👇





1) அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2) 2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3) தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4) ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5) அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6) பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

7) ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8) ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9) பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10) இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11) ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12) அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13) ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

14) ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15) கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16) கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17) கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18) கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19) மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20) அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்