June 29, 2017

2018 ஜனவரி மாதத்துக்குள் 1முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார் - SCERT இயக்குனர் க . அறிவொளி தகவல்.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க. அறிவொளி கூறுகையில்,

🔹 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது.

🔸 இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.


🔹  www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

🔸 30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்

🔹 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற ஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும். அதன் பின்னர் 2018-19-ம் கல்வி ஆண்டில் இந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்” இவ்வாறு கூறினார்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்