September 30, 2016

சென்னை பல்கலைக்கழக தொலைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சென்னை: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகளை www.ideunom.ac.inஎன்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை
 செய்ய வேண்டியவை 
செய்ய கூடாதவை

 செய்ய வேண்டியவை
முதலில் கட்சிகளின் சின்னம்அடங்கிய துண்டு சீட்டில்தங்களுக்குபிடித்த சின்னத்துக்கு அருகில் டிக்அடிக்கவேண்டும் .

நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில்இருக்கும் சின்னத்தில்படாமல்பார்த்துக்
கொள்ள வேண்டும்.

டிக் அடித்த துண்டு சீட்டை A என்றஇளஞ்சிவப்பு நிறஅலுவலக கவரில்வைத்து ஒட்ட வேண்டும்.

ஸ்டேபில் பண்ணக்கூடாது.*
13A என்று ஒரு படிவம் இருக்கும்.அதை சரியாக பூர்த்திசெய்துதங்களுக்கு தெரிந்தசான்றொப்பமிட தகுதிஉடையநண்பர்களிடம் அந்த படிவம் 13A ல்சான்றொப்பம்வாங்க வேண்டும்.

பின்னர் A என்ற ஒட்டியஇளஞ்சிவப்பு நிறஅலுவலககவரையும், 13Aபடிவத்தையும் சேர்த்து B என்றகவரில்போட்டு ஒட்டி விட வேண்டும் .

செய்ய கூடாதவை
படிவம் 13A ல் சான்றொப்பம்வாங்காமல் இருக்கக்கூடாது.

இரண்டு அலுவலக கவரையும்ஒட்டாமல் இருக்கக்கூடாது.

படிவம் 13A ஐ A என்ற கவருக்குள்தப்பபித்தவரி கூடவைத்துவிடக்கூடாது

மேலும் சந்தேகம் இருந்தால்உங்கள் நண்பர்களிடம்ஆலோசித்துதெளிவு படுத்தி கொள்ளுங்கள் .

இந்த முறை ஒரு தபால் வாக்கு கூடசெல்லாத வாக்காகஇருக்கக்கூடாது

ஆதாரம் : இந்திய தேர்தல்ஆணையம்

துறை தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

மாவட்டக்கல்வி அலுவலர்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With
Books).

+2 பாட புத்தக அளவு மாற்றம்

பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!
பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.

பிளஸ் 2 பாட புத்தகம், ஏ5 அளவில் (5.83x8.27) உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. கற்றலில் பின்னடைவு மற்றும் கற்கும் திறன் தாமதமாவதாகவும் ஒரு கருத்து எழுந்தது. இதை தொடர்ந்து புத்தக அளவை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஏ4 அளவில் (8.27x11.69) புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

பழைய புத்தகத்தில் இருந்த வரிகள், அளவு மாற்றி அச்சிடப்பட்ட புத்தகத்தில் மாறாமல் வந்துள்ளதா? அல்லது மாற்றம் உள்ளதா? என்பது குறித்த ஆய்வு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. ஈரோட்டில் கணக்குப்பதிவியல், வணிகவியல், உயிரி-வேதியியல், ஆங்கில பாட புத்தகங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. ஒரு பாட பிரிவுக்கு மூன்று குழு வீதம், பாட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குழுவில் அரசு, மெட்ரிக்., பள்ளி என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஈரோடு மட்டுமின்றி திருச்சி, சென்னையிலும் நடக்கும் இந்தப் பணி, அக்.,1ம் தேதி வரை நீடிக்கும் என்று, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

முதுகலை ஆசிரியர் தேர்வு (PGTRB) எப்போது


குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பது முக்கியம்


பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பதுமுக்கியம் - உயர் நீதிமன்றம்

குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு,  அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் முக்கியமாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி பெருமலை கிராமம் புதுகாலனியைச் சேர்ந்தவர்  பிரகாஷ் (22). இவரை, பென்னாடம் போலீசார்,  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 7ம் தேதி கைது செய்து  சிறையில் அடைத்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து கடத்தி, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரர் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் நீதிபதி வைத்தியநாதன் கூறியதாவது:பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய வாக்குமூலத்தில் தான்தான் விருப்பப்பட்டு பிரகாஷுடன் சென்றதாகவும், பெற்றோர் தீவிரமாக தனக்கு திருமண வரன் பார்ப்பதாகவும், அதில் தனக்கு விருப்பமில்லை என்றும், தன்னை அழைத்து செல்லாவிட்டால் விஷம் குடித்துவிடுவேன் என மிரட்டியதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக பெற்றோர்கள் செயல்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். பிரகாஷின் ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாலும், 84 நாட்களாக சிறையில் இருப்பது, பெண்ணின் வாக்குமூலம், 6 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இயலாதது போன்ற காரணங்களாலும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் பிரகாஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.  10 ஆயிரத்துக்கான இரு நபர் உத்தரவாதத்தை திட்டக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தினமும் காலை 10.30 மணிக்கு நான்கு வாரங்களுக்கும், பின்னர் விசாரணைக்கு தேவைப்படும்போதும் விசாரணை அதிகாரி முன்பு மனுதாரர் ஆஜராக வேண்டும். சாட்சிகள்,  ஆதாரங்களை கலைக்கக் கூடாது. தலைமறைவாக கூடாது. தவறும்பட்சத்தில், திட்டக்குடி நீதிமன்றம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த வழக்கை முடிப்பதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது, குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதைவிட, அவர்களுக்காக தங்களது நேரத்தை செலவிடுவது முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை பெண்ணின் விருப்பப்படியே பிரகாஷ் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளான். இந்து திருமண சட்டத்தின்படி ஆண், பெண்ணுக்கான திருமண வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அந்த வயதுக்கு  முன்பாகவே அவர்கள் ஒருவருடன் ஓடிப் போய்விடுகிறார்கள். இதன்மூலம் சட்டத்தின்முன் இவர்களின் திருமணம் செல்லாதது ஆகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த குழந்தைகளின் கனவுகள் சிதைந்து விடுவதுடன், அவர்களை வளர்த்த பெற்றோரின் மேன்மைக்கு குந்தகமும் ஏற்படுகிறது.

இதுபோன்ற குற்றங்களுக்கு ஊடகங்கள் காரணமாக அமைகிறது.சமூக சிந்தனையுடன் பார்க்கும்போது, குழந்தைகளிடம் நல்ல எண்ணங்களை கொண்டு வருவதில் பெற்றோரின் பங்கு முக்கியமானதாக உள்ளது. தற்போதுள்ள நிலையில் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்களின் மீதுள்ள பயத்தினால் குழந்தைகள் தங்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் வெளியே சொல்ல பயப்படுகின்றனர். குழந்தைகளிடம் தோழமையுடன் பெற்றோர்கள் பழகும்போதுதான், குழந்தைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அப்போதுதான் பெற்றோரிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற மனப்பான்மை குழந்தைகள் மத்தியில் உருவாகும். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதும், குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடாததும் இருவருக்குமிடையே தூரத்தை அதிகப்படுத்துகிறது.

 பலர் தனிக்குடித்தனம் செல்வதால், தாத்தா - பாட்டி ஆகியோர் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதுடன், தங்களை கவனிக்க ஆளில்லாதவர்களாக குழந்தைகள் மாறிவிடுகிறார்கள்.     குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதைவிட, அவர்களுக்காக தங்களது நேரத்தை செலவிடுவது முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை

பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை.


'தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; 

வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி வகுப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து அவர்களுக்கு, தேர்தல் பொறுப்பில் உள்ள, வருவாய் அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்காவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்களுக்கு, மொபைல் போனில் எச்சரிக்கை தகவலும் அனுப்பப்பட்டு உள்ளது.

40 லட்சம் திரட்டி அரசு பள்ளியை தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்

*ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்*


மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு ஆரம்பப் பள்ளி கம்பீரத்துடன் இயங்கி வருகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.


ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க்குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச்சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது. இவை அனைத்துக்கும் பின்னால் அமைதியாக, அதேசமயத்தில் ஆற்றலுடன் இயங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.


*அவரின் அளப்பரிய பணி குறித்த பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியர் தொடரில்...*

"பிடித்தது கிடைக்காதபோது, கிடைத்ததைப் பிடித்தமாக்கிக் கொள்வது என்னுடைய கொள்கை. மருத்துவராக ஆசைப்பட்டேன்; மதிப்பெண்கள் போதவில்லை. வேதியியல் படித்தேன்; முதுகலையில் இடம் கிடைக்கவில்லை. என்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி ஆசிரியர் பயிற்சியில் இணைந்தேன். அங்கும் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட்டேன். 5 வருடங்கள் கழித்து 1995-ல் ஆசிரியர் பணி கிடைத்தது.


ஆசிரியர் பயிற்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. வேலைக்குச் சேர்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றோர் ஆசானாக அமைந்தார். அங்கே வேலைபார்த்த 5 வருடங்களில் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். பொதுவாக பள்ளிகளில் தலைமையாசிரியர் பெரிய வகுப்புகளையும், உதவி ஆசிரியர்கள் சிறிய வகுப்புகளையும் கவனித்துக்கொள்வர். நான் புதிது என்பதால் சிறிய குழந்தைகளைக் கையாளத் தடுமாறினேன். அதனால் அவர் 1, 2 வகுப்புகளைக் கவனித்துக்கொள்ள, நான் 3,4,5 வகுப்புகளுக்குக் கற்பித்தேன். இதையே நான் தலைமையாசிரியர் ஆனபிறகும் கடைபிடித்து வருகிறேன்.


2002-ல் குஞ்சாம்பட்டி தொடக்கப்பள்ளிக்குத் தலைமையாசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. அங்கு 6 மாணவர்களே இருந்தார்கள். பக்கத்து கிராமங்களில் இருந்து எங்கள் பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்க முடிவுசெய்தோம். கிராமத்து சிற்றுந்து உரிமையாளரிடம் பேசி, 3 ரூ.ஆக இருந்த பயணக்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தோம். திரும்ப ஊர்த்தலைவரிடம் பேச, அவர் மீதி 1.50 ரூபாயைக் கொடுத்துவிட்டதால் மாணவர்கள் கட்டணமில்லாமலே பள்ளிக்கு சிற்றுந்தில் வந்தார்கள்.


ஒரே மாதத்தில் 6 பேராக இருந்த எண்ணிக்கை, 23 மாணவர்களாக அதிகரித்தது. ஒரு பள்ளிச்சீருடை, காலணி, சாக்ஸ், பெல்ட், அடையாள அட்டை ஆகியவற்றை சொந்த செலவில் மாணவர்களுக்கு வாங்கிக்கொடுத்தேன். தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மேசை, நாற்காலிகளைப் பெற்றோம். சுவர்களுக்கு வண்ணம் பூசினோம். அரசு ஒதுக்கிய நிதியின் மூலம் ஒரு பக்க சுற்றுச்சுவரைக் கட்டி, மற்றொரு பக்கத்தை என்னுடைய பணத்தில் கட்டி முடித்தேன்.


*படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர்*

அடுத்ததாக நான் படித்த பள்ளிக்கே தலைமையாசிரியராக மாற்றம் செய்யப்பட்டேன். அடிப்படை வசதிகளைச் செய்து முடித்து, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கணிப்பொறிகளை வாங்கினோம். அரசு ஒதுக்கிய 2 கணிப்பொறி சேர்ந்து 10 கணிப்பொறிகளையும் கொண்டு ஆய்வகத்தை நிறுவினோம். ஒரு வருடத்திலேயே 2006-ல் சிறந்த கணினிவழிக்கற்றல் மையத்துக்கான விருது கிடைத்தது.


வெளியே மண் தரையாக இருந்ததால் கணிப்பொறி அறைகளில் புழுதி புகுந்து அவை அடிக்கடி பழுதாகின. அதனால் பள்ளி வளாகம் முழுக்க ரூ.1 லட்சம் செலவில் சிமெண்ட் கல் நட்டோம். நன்கொடையாக ரூ.40 ஆயிரம் கிடைத்தது. மீதியை என் பணத்திலேயே சமாளித்துவிட்டேன். என் இரு மகள்களும் அரசுப் பள்ளியிலேயே படித்ததால் என் பள்ளிக்கு நிறைய செய்ய முடிந்தது. மூத்த மகள் இப்போது மருத்துவம் படிக்கிறார்.


தனியார் பள்ளிகளின் படையெடுப்பால் பரமத்தி ஒன்றியத்தின் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையை அரசுப் பள்ளிகளே மாற்ற வேண்டும். எங்கள் தொடக்கப்பள்ளிக்கு இதுவரை சுமார் ரூ.40 லட்சம் நன்கொடை பெற்றிருக்கிறோம். பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, ரூ.1.5 லட்சத்துக்கு புது கணினிகள் உள்ளன.

கல்விச்சீர் வழங்கும் விழா

புதுக்கோட்டை ஆசிரிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கல்விச்சீர் பற்றிக் கேள்விப்பட்டேன். அதை எங்கள் பள்ளியிலும் செயல்படுத்த முடிவு செய்தோம். இதில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கிவந்து சீர்வரிசையாக வழங்கலாம்.

September 29, 2016

பங்கு சந்தையில் வருங்கால வைப்பு நிதி 10% அதிகரிப்பு

பங்குச்சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிப்பு

பங்கு சந்தைகளில்ய்ய செயப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்
.
புதுடெல்லி:

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீடு இ.டி.எப். என்னும் பங்குச்சந்தை வர்த்தக நிதி வாயிலாக செய்யப்படுகிறது. தற்போது இ.பி.எப். சந்தாவில் இருந்து 5 சதவீதம் நிதி, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க இ.பி.எப். அமைப்பு பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில் இ.பி.எப். அமைப்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம், டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது பங்குச்சந்தையில் இ.பி.எப். நிதியை கூடுதலாக முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

பண்டிகை முன் பணம் கோரும் படிவம்


ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு..


தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகம், வடதமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் , மேலும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகமாக நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, சாலிகிராமம், பட்டினப்பாக்கம், கிண்டி, அடையாறு, மீனம்பாக்கம், அண்ணாசாலை, சேத்துப்பட்டு, சோழிங்கநல்லூர், ஆயிரம்விளக்கு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு சுமார் 90 நிமிடங்களில் பெய்த கனமழையில் 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் ஏமாற்றம்

ஓட்டை உடைசல் உபகரணம்; ஏமாறும் மாணவர்கள்!!!
தமிழ்நாடு அறிவியல் மையத்தில், உபகரணங்கள் பராமரிப்பின்றி உடைந்து கிடப்பதாலும், சரியான வழிகாட்டுதலுக்கு ஆட்கள் இல்லாததாலும், மாணவர்கள்,
ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில், சென்னை, கோட்டூர்புரத்தில், அறிவியல் தொழில்நுட்ப மையம் உள்ளது. இந்த மையத்தில் பிர்லா கோளரங்கம், முப்பரிமாண படக்காட்சி, போக்குவரத்து கண்காட்சி, ராணுவ தளவாடங்களின் கண்காட்சி, கணித, உயிரியல் கண்காட்சி போன்றவை உள்ளன.

தினமும், ஏராளமான மாணவர்கள், கண்காட்சியை பார்க்க வருகின்றனர். அறிவியல் மையத்தை சுற்றிப்பார்க்க, பெரியவர்களுக்கு, 45 ரூபாய்; 12 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு, 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளாக அறிவியல் மையம் சரியாக பராமரிக்கப்படவில்லை. சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், மாணவர்கள் ஏமாற்றம் அடையும் சூழல் உள்ளது.

இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:

சென்னையில் உள்ளது, மிகப்பெரிய அறிவியல் மையம் என்பதால், பல மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான மாணவர்கள் இங்கு வருகின்றனர். ஆனால், மாவட்ட அறிவியல் மையத்தை விட, இங்குள்ள கருவிகள் மிக மோசமான உள்ளன. பல உபகரணங்கள் செயல்படவில்லை; உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து, இயக்குனரகத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆண்டுதோறும், அறிவியல் மைய வளர்ச்சிக்காக, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. உண்மையில் நிதி செலவிடப்படுகிறதா அல்லது செலவிட்டதாக கணக்கு காட்டப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.


தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களும் போனஸ் பெறுவர்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 மாவட்டங்களில் உள்ள 38 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டது.

இதற்கு என்ஜிஓ.,க்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 155 பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையத்தில் உள்ளது
ஆய்வில் தெரிய வந்துள்ளது.