September 29, 2016

மாணவர்கள் ஏமாற்றம்

ஓட்டை உடைசல் உபகரணம்; ஏமாறும் மாணவர்கள்!!!
தமிழ்நாடு அறிவியல் மையத்தில், உபகரணங்கள் பராமரிப்பின்றி உடைந்து கிடப்பதாலும், சரியான வழிகாட்டுதலுக்கு ஆட்கள் இல்லாததாலும், மாணவர்கள்,
ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில், சென்னை, கோட்டூர்புரத்தில், அறிவியல் தொழில்நுட்ப மையம் உள்ளது. இந்த மையத்தில் பிர்லா கோளரங்கம், முப்பரிமாண படக்காட்சி, போக்குவரத்து கண்காட்சி, ராணுவ தளவாடங்களின் கண்காட்சி, கணித, உயிரியல் கண்காட்சி போன்றவை உள்ளன.

தினமும், ஏராளமான மாணவர்கள், கண்காட்சியை பார்க்க வருகின்றனர். அறிவியல் மையத்தை சுற்றிப்பார்க்க, பெரியவர்களுக்கு, 45 ரூபாய்; 12 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு, 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளாக அறிவியல் மையம் சரியாக பராமரிக்கப்படவில்லை. சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், மாணவர்கள் ஏமாற்றம் அடையும் சூழல் உள்ளது.

இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:

சென்னையில் உள்ளது, மிகப்பெரிய அறிவியல் மையம் என்பதால், பல மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான மாணவர்கள் இங்கு வருகின்றனர். ஆனால், மாவட்ட அறிவியல் மையத்தை விட, இங்குள்ள கருவிகள் மிக மோசமான உள்ளன. பல உபகரணங்கள் செயல்படவில்லை; உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து, இயக்குனரகத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆண்டுதோறும், அறிவியல் மைய வளர்ச்சிக்காக, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. உண்மையில் நிதி செலவிடப்படுகிறதா அல்லது செலவிட்டதாக கணக்கு காட்டப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்