September 29, 2016

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு..


தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகம், வடதமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் , மேலும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகமாக நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, சாலிகிராமம், பட்டினப்பாக்கம், கிண்டி, அடையாறு, மீனம்பாக்கம், அண்ணாசாலை, சேத்துப்பட்டு, சோழிங்கநல்லூர், ஆயிரம்விளக்கு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு சுமார் 90 நிமிடங்களில் பெய்த கனமழையில் 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்