September 29, 2016

பங்கு சந்தையில் வருங்கால வைப்பு நிதி 10% அதிகரிப்பு

பங்குச்சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிப்பு

பங்கு சந்தைகளில்ய்ய செயப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்
.
புதுடெல்லி:

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீடு இ.டி.எப். என்னும் பங்குச்சந்தை வர்த்தக நிதி வாயிலாக செய்யப்படுகிறது. தற்போது இ.பி.எப். சந்தாவில் இருந்து 5 சதவீதம் நிதி, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க இ.பி.எப். அமைப்பு பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில் இ.பி.எப். அமைப்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம், டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது பங்குச்சந்தையில் இ.பி.எப். நிதியை கூடுதலாக முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்