January 19, 2018

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு [B.Ed.,] பயில்வது, கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ள ஆணையிடப்பட்டது - தற்போது திருத்தம் வெளியிடப்பட்டது சார்ந்து அரசாணை வெளியீடு. - அரசாணை (நிலை) எண்.259, பள்ளிக்கல்வி (தொ.க.1(2)த் துறை, நாள்: 07.12.2017.


- தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 12.01.2018.


Breaking News: தமிழகத்தில் புறநகர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியீடு.



இன்று [19.01.2018] நள்ளிரவு முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - SSA - ஆசிரியப் பயிற்றுநராக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பமுடைய பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து [01.01.2006 க்கு பின்னர் TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்] விண்ணப்பம் கேட்டு பெறுவது குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். (நாள்: -.01.2018).


மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பள்ளிகளில் கவுன்சலிங் மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.


தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கும் முறை 2018 பிப்ரவரி முதல் அமலுக்கு வருகிறது. [நாளிதழ் தகவல்].



தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமுல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.



📙 ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.