January 20, 2018

தமிழகத்தில் இனி ஆண்டு தோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும். - தமிழக அரசு அறிவிப்பு.






🚌 தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.


 Thanks to 🙏
புதியதலைமுறை தொலைக்காட்சி

🚌 சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவு, சொகுசு பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


Thanks to 🙏
பாலிமர் நீயூஸ் தொலைக்காட்சி


🚌 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

🚌 இந்நிலையில் ரூ.1000 பஸ் பாஸில் குறிப்பிட்டுள்ள காலம் வரை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

🚌 பயணக்கட்டணத்துடன் வரி வசூல்
விபத்து, சுங்க வரியாக கட்டணத்துடன் ரூ.1, குளிர்சாதன பேருந்தில் ரூ.2 சேர்த்து வசூல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

🚌 நேற்று அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

🚌 அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்