October 05, 2016

மறுபடியும் முதலில் இருந்தா அய்யோ???

மறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' !
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும் முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப துவங்கியுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில், ஒரு மாதத்திற்கு மேலாக, அரசு இயந்திரம் ஈடுபட்டு வந்தது. இதில், செப்., 25ல் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள்

பின்பற்றப்பட்டு வந்தன.

டிச., 31க்குள் : தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை வரை, முடிந்துவிட்டது. இதற்காக, 10 நாட்களாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, கடுமையான பணிச்சுமை இருந்தது. தேர்தல் பணிகளுக்காக, செலவும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை முடிந்தாலே, பாதி தேர்தல் பணிகள் நிறைவு பெற்றது போல் அதிகாரிகள் கருதினர். ஆனால், நேற்று மாலை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பு வெளியிட்டு, மீண்டும், டிச., 31க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். தேர்தல் பணி அதிகாரிகள், 'மீண்டும் நாங்கள் முதல்ல இருந்து வேலை செய்யணுமா' என, புலம்பி தவிக்கின்றனர்.


இது குறித்து தேர்தல் பணி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருவாய் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும், ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து பகுதி களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர்.


அனைத்தும் வீண் தான் : மறுதேர்தல் அறிவிப்பால், மீண்டும் புதிய நடைமுறைகளை ஆரம்பத்தில் இருந்து, பின்பற்ற வேண்டியிருக்கும். தற்போது வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதா, இல்லையா என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமோ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளோ, எந்த தொடர் உத்தரவும் பிறப்பிக்கவில்லை.


ஒருவேளை மேல்முறையீடு : எதுவும் செய்து, கோர்ட் உத்தரவு ரத்தானால் மட்டுமே, தற்போதைய நடைமுறை தொடரும்; இல்லாதபட்சத்தில் இதுவரை செய்த தேர்தல் பணிகள் அனைத்து வீண் தான்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

வங்கிகளுக்கு 5 நாள் தொடர்ந்து விடுமுறை...

*வங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை*

வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை), அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 10 (திங்கள்கிழமை-ஆயுதபூஜை), அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை-விஜயதசமி), அக்டோபர் 12 (புதன்கிழமை-மொஹரம்) ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 5 நாள் விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்

TNTET வழக்கு.. காலி இடங்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவு....


ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு...

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.

ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னணி: தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
          நன்றி
                   விஜய் ரிஷ்வா

October 04, 2016

TNTET CASE நிலவரம்...

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு இன்று (4.10.16) விசாரணைக்கு வந்து விவாதங்கள் நடைபெற்றதாகவும் இதை தொடர்ந்து இந்த வழக்கு நாளையும் அதாவது (5.10.16) அன்றும் விசாரணை பட்டியலில் இடம் பெற்று உள்ளது..

எனவே நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.. நாளையாவது விடிவு வருமா? இல்லை நாளையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுமா? பொறுத்து இருந்து பார்க்கலாம்...

நன்றி
        விஜய் ரிஷ்வா

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!!!

*உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?- வழக்கறிஞர் விளக்கம்*

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

திமுக தொடர்ந்த இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் தொடர்பான அரசாணைகள் அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வெளியிட்ட மூன்று அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 30க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்காக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து கருத்து கூறியுள்ள வழக்கறிஞர் வில்சன், செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மறுநாளே அதிகாலை 12.15 மணி நேரம் என குறிப்பிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

எந்தெந்த வார்டுகள் யார் யாருக்கு ஒதுக்கீடு என்பதை முறையாக அறிவிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்தி.. உள்ளாட்சி தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை..


சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் டிசம்பர் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தரக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்துள்ளது. -

Facebook கணக்கில் மொபைல் எண் பதிவிட வேண்டாம் சைபர் க்ரைம் எச்சரிக்கை..

*சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி*

பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை

சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி பல பெண்களை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த தளத்தில் செல்போன், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தை ஏராளமானோர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடர் போல் இணைக்கும் வசதி பேஸ்புக்கில் உள்ளது. தற்போது, இந்த பேஸ்புக் இணையதளத்தில் பலர் போலியான பெயர்களுடன் வலம் வருகின்றனர். இன்னும் சிலர் தங்களது அடையாளங்களை முற்றிலும் மறைத்து உண்மைக்கு மாறான தகவலை பதிவேற்றம் செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகி,அவர்களுடன் நெருக்கமாக இருக் கும் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் சிலரை மிரட்டி பணம் பறித்துள்ளார். அவரை போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பேஸ்புக் பயன் பாட்டாளர்கள் அதை கவனமாக கையாள வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். பேஸ்புக் மூலம் நடைபெறும் மோசடி குறித்து துணை ஆணையர் செந்தில் குமார் கூறும்போது, “இணைய தளம் மூலம் நடக்கும் மோசடி குறித்து புகார்கள் வருகின்றன. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் ஆணையர் சங்கர் உத்தர விட்டுள்ளனர். இணையதள மோசடி விவகாரத்தில் ரகசியம் காக்கப் படுவது அவசியம். வெளியே தெரிந்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். எனவே, சில வழக்கு களை ரகசியமாக விசாரித்து குற்ற வாளிகளை கைது செய்கிறோம். சில நேரங்களில் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்புகிறோம்” என்றார்.

சைபர் கிரைம் அறிவுரை

*முகம் தெரியாத நபர்களிடம் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி, கல்லூரி,அலுவலக முகவரி உள்ளிட்ட தகவல்களை பகிர வேண்டாம்.*

*பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.*

*அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.*

*நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக்கூடும் என்பதை மறவாதீர்கள்*.

*அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்து விடுங்கள். அதுவும் பதிவு செய்யப் பட்டு,உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.*

*உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம்.*

*குழந்தைகள், பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதைத் தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக மாற்றப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்*.

*உங்கள் password-ஐ குடும்பத் தினர் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.*

*யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள். இல்லை என்றால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவியுங்கள். உங்களது ரகசியம் காக்கப்படும்.*

21,214 வழக்குகள்

சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்தியா முழுவதும் கடந்த இரு ஆண்டுகளில் 21 ஆயிரத்து214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில், 13 ஆயிரத்து 873 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தை பொருத்தவரை கடந்த 2 ஆண்டுகளில் 314வழக்குகள் பதியப்பட்டு 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.