October 05, 2016

மறுபடியும் முதலில் இருந்தா அய்யோ???

மறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' !
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும் முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப துவங்கியுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில், ஒரு மாதத்திற்கு மேலாக, அரசு இயந்திரம் ஈடுபட்டு வந்தது. இதில், செப்., 25ல் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள்

பின்பற்றப்பட்டு வந்தன.

டிச., 31க்குள் : தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை வரை, முடிந்துவிட்டது. இதற்காக, 10 நாட்களாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, கடுமையான பணிச்சுமை இருந்தது. தேர்தல் பணிகளுக்காக, செலவும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை முடிந்தாலே, பாதி தேர்தல் பணிகள் நிறைவு பெற்றது போல் அதிகாரிகள் கருதினர். ஆனால், நேற்று மாலை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பு வெளியிட்டு, மீண்டும், டிச., 31க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். தேர்தல் பணி அதிகாரிகள், 'மீண்டும் நாங்கள் முதல்ல இருந்து வேலை செய்யணுமா' என, புலம்பி தவிக்கின்றனர்.


இது குறித்து தேர்தல் பணி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருவாய் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும், ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து பகுதி களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர்.


அனைத்தும் வீண் தான் : மறுதேர்தல் அறிவிப்பால், மீண்டும் புதிய நடைமுறைகளை ஆரம்பத்தில் இருந்து, பின்பற்ற வேண்டியிருக்கும். தற்போது வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதா, இல்லையா என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமோ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளோ, எந்த தொடர் உத்தரவும் பிறப்பிக்கவில்லை.


ஒருவேளை மேல்முறையீடு : எதுவும் செய்து, கோர்ட் உத்தரவு ரத்தானால் மட்டுமே, தற்போதைய நடைமுறை தொடரும்; இல்லாதபட்சத்தில் இதுவரை செய்த தேர்தல் பணிகள் அனைத்து வீண் தான்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்