February 21, 2017

ஆன்லைன் மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி மே மாதம் அறிமுகம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல்


வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுப்பது, இழப்பீடு பெறுவது, ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்வது உள்ளிட்டவற்றை, வரும்மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என பிஎப் ஆணையர் விபி ஜாய் தெரிவித்தார்.



தற்போது இந்த அனைத்துவிதமான வேலைகளும் பணியாளர்கள்
மூலமாகவே நடைபெற்றுவருகின்றன. இது தொடர்பாக விபி ஜாய் மேலும் கூறியதாவது:

அனைத்துவிதமான சேவைக ளைப் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பிஎப் அலுவலகங்களையும் சர்வரில் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் இரு மாதங்களில் அந்தப் பணி முடிவடையும். அதன்பிறகு அனைத்து சேவைகளுக்கும் ஆன் லைன் மூலமே விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் மூலம் இழப்பீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட சில மணிநேரங்களில் இழப்பீடு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம் என்றார்.

தற்போது அனைத்துவிதமான தொகையும் (பிஎப் பணத்தைஎடுப்பது, இழப்பீடு உள்ளிட்ட அனைத்தும்), விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பட்டதில் இருந்து 20 நாட்கள் வரை தேவைப் படும். தற்போது 50 அலுவல கங்களை சர்வரில் இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது. முன்னதாக, பிஎப் கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள் தங்க ளது ஆதார் அடையாள அட்டை எண்ணை மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பிஎப் அமைப்பு தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்