February 21, 2017

2017 ஏப்ரல் 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, புதிய அரசு நிறைவேற்றாவிட்டால், ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

மதுரையில், சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

நுாறு நாள் வேலை திட்டத்திற்கும் நிதி இல்லை. அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.

எட்டாவது சம்பள குழு அமைத்து, சம்பள மாற்றத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊட்டச்சத்து துறை ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில செயற்குழு முடிவின்படி, மார்ச் 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடக்கும். ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்