February 21, 2017

குறைந்த மாத கட்டணத்தில் மார்ச் 31, 2018 வரை ஜியோ சலுகைகள் நீட்டிப்பு...! - முகேஷ் அம்பானி இன்று (21.02.2017) அதிரடி அறிவிப்பு.



📲 ரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி சலுகைகளை அறிவித்து, மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளது.


📲 ப்ரீ டேட்டா சலுகையால், பெரும்பாலான மக்கள் தற்போது ஜியோ சிம் பயன்படுத்தி வருகின்றனர்.

📲 இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் 100 மில்லியனை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 100 மில்லியன் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ள ஜியோ, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக, பல புதிய சலுகைகளை இன்று (21.02.2017) முகேஷ் அம்பானி அறிவித்தார்.

📲 தற்போது ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ப்ரீ டேட்டா சர்வீஸ், வரும் மார்ச் மாதம் முடிவடையும் தருவாயில், தொடர்ந்து ப்ரீ சர்வீசை மார்ச் 31, 2018 வரை பயன்படுத்த குறைந்த கட்டணத்தில் சலுகையை நீட்டித்துள்ளார் முகேஷ் அம்பானி. அதன்படி

📱 ஜியோ சலுகை மார்ச் 31ம் தேதி முடிந்தாலும் பின்னரும், கால் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது.

📱 மாதந்தோறும் அளவில்லா இலவச கால் மற்றும் டேட்டா பெற ஜியோ பிரைம் திட்டம் கொண்டுவரப்பட்டுளளது.

📱 பிரைம் திட்டப்படி, மாதந்தோறும் அளவில்லா கால் பெற ரூ. 99 கட்டணமும், அளவில்லா டேட்டா சேவையை பயன்படுத்த ரூ. 303 கட்டணமும் வசூலிக்கப்படும்.

📱 மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட 20 சதவித கூடுதல் டேட்டாவை ஜியோ வழங்கும்.

📱 2017 மார்ச் 31க்குள் ஜியோ சிம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரைம் திட்டத்தின் சலுகை உண்டு.

📱 கடந்த 170 நாட்களில் ஜியோவின் 4ஜி சேவை 10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளது.

📱 பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இலவச சேவை நீட்டிக்கப்படும்.

📲 ஒரு நொடிக்கு 7 புதிய வாடிக்கையாளர்கள் ஜியோவில் இனணகிறார்கள்.

📲 ஜியோ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ஜிபி-க்கு அதிகமான டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர்.

📲 நாள்தோறும் 5.5 கோடி மணி நேர வீடியோ பயன்பாட்டை ஜியோ மேற்கொண்டு வருகிறது.

📲 ஜியோ சேவையால், டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் இணைய டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், ஜியோ டேட்டவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சமமாக உள்ளது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்