February 21, 2017

விரைவில் அறிமுகமாகிறது புதிய ₹ 1000 ரூபாய் நோட்டுகள்... அச்சடிக்கும் பணி தீவிரம்...



புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரூ.1000 நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுகள் ஒழிப்பதற்காகவும் உயர்மதிப்புடைய பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அவை வங்கிகள், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வழியாக, திரும்பப் பெறப்பட்டு, ரிசர்வ் வங்கி கருவூலத்தில் சேர்க்கப்பட்டன

இதற்காக புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, ஓரளவு சில்லறை தட்டுப்பாட்டையும் மத்திய அரசு சீர்செய்தது.

இந்நிலையில், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரூ.1000 நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன.

இதற்காக, ரூ.1000 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. முழுவீச்சில் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளைப் போன்றே, ரூ.1000 நோட்டுகளும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், ரூ.50,100 நோட்டுகளும் திரும்பப்பெற்று பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரூபாய் நோட்டுகளாக விரைவில் அச்சடிக்கப்பட்டு, வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்