தமிழ் நாடு அரசுபணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். காலியாக இருந்த, 12 இடங்களில், 11 உறுப்பினர்கள், 2016ல்
நியமிக்கப்பட்டனர். இதில், விதிமீறல் இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், 11 உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என அறிவித்தது; சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.இந்த தீர்ப்பால், டி.என்.பி.எஸ்.சி., செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு பணி நியமனம் தொடர்பாக, உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தலைவர் மற்றும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்றால் மட்டுமே, கூட்டம் நடத்த முடியும். அதன்படி மொத்தம், 15 பேரில், ஐந்து பேர் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது தலைவர் அருள்மொழி, உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், குப்புசாமி என, மூன்று பேர் மட்டுமே இருப்பதால், ஆணைய கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்