January 18, 2017

வருங்கால வைப்பு நிதி: ஓய்வூதியர்கள் ஆதார் விவரம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்


தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் விபரங்களை சமர்பிக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் மதுரை மண்டல ஆணையர் ரபீந்திர சமால் வெளியிட்ட செய்தி: தொழிலாளர் ஓய்வூதியத்
திட்டத்தின் கீழ் உள்ள அனைவரும் ஆதார் எண் சமர்பிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனவே ஓய்வூதியர்கள் அனைவரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அருகில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள "பயோ மெட்ரிக்' இயந்திரங்களில் ஆதார் எண், கைரேகை உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்