January 18, 2017

கிராமங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் நிறுவனங்கள் கடும் போட்டி..


புதுடெல்லி: பழைய 500, 1,000 நோட்டு செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியான பிறகு ஏற்பட்ட கடும் பணத்தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் வேறு வழியின்றி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கான கடந்த ஆண்டு டிசம்பர் வரை கார்டு பரிவர்த்தனை கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டன. தற்போது மீண்டும் பரிவர்த்தனை கட்டணத்தை
வங்கிகள் வசூலிக்க தொடங்கி விட்டன.

 பணமற்ற பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துவரும் மத்திய அரசு, கட்டண ரத்து தொடர்பான நடவடிக்கை எடுக்காததால் மக்கள் ஏடிஎம், வங்கிகளில் காத்திருந்து பணம் எடுத்து செலவு செய்ய தொடங்கி விட்டனர். இருப்பினும் சில்லரை தட்டுப்பாடு முழுமையாக தீரவில்லை. குறிப்பாக பண பரிவர்த்தனையை மட்டுமே நம்பியுள்ள கிராமங்கள், ஊரக பகுதிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடத்தை பிடிக்க மொபைல் நிறுவனங்களுக்குள் கடும் போட்டி இருந்து வருகிறது.

கார்டு பரிவர்த்தனைக்கு பாயின்ட் ஆப் சேல் கருவிகள் அவசியம். ஆனால், இதை நிறுவன இணைய இணைப்பு மட்டுமின்றி அதிக முதலீடும் தேவை. ஆனால், மொபைல் வாலட்கள் இந்த பிரச்னைக்கு எளிய தீர்வாக அமைந்து விட்டன. எனவே, தங்களது மொபைல் வாலட்களை பயன்படுத்துமாறு கோரி வருகின்றன. இதற்கான சிறப்பு சலுகைகள், கட்டண தள்ளுபடிகளை இந்த நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

ஏர்டெல் பேமன்ட் பேங்க், ஜியோ, வோடபோ–்ன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களிடையே இந்த போட்டி கடுமையாக இருந்து வருகிறது.
குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள வியாபாரிகளை கவர கட்டண தள்ளுபடிகளை மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு கார்டு பரிவர்த்தனைக்கும் கட்டண ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்