January 23, 2017

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் நிரந்தரமானது : ஆளுநர் அறிவிப்பு..


சென்னை, ஜன.23 (டி.என்.எஸ்) ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டம் நிரந்தரமானது, என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர், சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்தார்.


ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்ட முன் வடிவை இன்றே நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இன்று மாலை 5 மணியளவில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து 27, 30, 31ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலுரை ஆற்ற உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்