January 20, 2017

மாநகராட்சி பள்ளி மாணவருக்கு 'குறை ஒன்றும் இல்லை' திட்டம்..

கோவை : மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்க, 'குறை ஒன்றும் இல்லை' திட்டத்தை, சி.ஐ.ஐ., துவக்கியுள்ளது.மாநகராட்சி, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) இணைந்து, தனியார்
மருத்துவமனைகள் பங்களிப்புடன், துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது; 2,600 தொழிலாளர்கள் பயன் பெற்றனர். இதேபோல், மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 'குறை ஒன்றும் இல்லை' திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.கோவையில் உள்ள, 83 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரில் உடல் நலம் குன்றியிருப்பவர்கள் யார் யார் என, அடையாளம் காணப்படும்.

தன்னார்வலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பேசி, பாதிப்புள்ள மாணவர்கள் கண்டறியப்படுவர்.அவர்களது பெற்றோரை வரவழைத்து, 'கவுன்சிலிங்' கொடுத்து, குழந்தைகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக விளக்கப்படும். அவர்களது ஒப்புதலுடன், கோடை விடுமுறை சமயத்தில், இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும். இதற்கு விருப்பமுள்ள தனியார் மருத்துவமனைகளுடன் பேச்சு நடத்தப்படும்.திட்ட துவக்க விழா, சி.ஐ.ஐ., அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்