January 19, 2017

சேலத்தில் ரயில் மீது ஏறி போராடிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததால் பதற்றம்..


சேலம் சேலத்தில் ரயிலின் மீது ஏறிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் ரயிலை மறித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ரயிலின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ஓடியதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு மாணவர் மீது உயர்அழுத்த மின்கம்பி உரசியது. அப்போது மின்சாரம் பாய்ந்து அந்த மாணவர் தூக்கி வீசப்பட்டார்.

உடல் முழுவதும் வெந்த நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த மாணவரை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்