January 19, 2017

கிராம பஞ்சாயத்துகளிலும் இலவச வை&பை ஹாட்ஸ்பாட்கள்..


புதுடில்லி : மத்திய அரசின் முத்தாய்ப்பான நடவடிக்கையான டிஜிட்டல் மற்றும் பணமில்லா வர்த்தக திட்டத்தை நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் சென்றடையும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.


அதன் ஒருபகுதியாக, 1,050 கிராமங்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளுக்காக இலவச வை&பை ஹாட்ஸ்பாட் சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடபர்க, மத்திய மின்னணுவியல் (எலெக்ட்ரானிஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் அருணா சவுந்தர்ராஜன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
டிஜிட்டல் கிராமம் திட்டத்தின் கீழ், ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்களுக்கு இலவச வைபை ஹாட்ஸ்பாட் வசதி செய்துதரப்பட உள்ளது. இந்த திட்டம் பொது, தனியார் நிறுவனங்கள் இணைந்து வழங்க உள்ளது.
இதற்காக, பொதுமக்கள் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த பொது சேவை மையங்கள் மூலம், கிராமங்களில் உள்ள மக்கள் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெற்றுகொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளதாக அருணா சவுந்தர்ராஜன் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்