January 19, 2017

4ஜி சேவையில் சேவைகளை தெறிக்கவிடும் வோடபோன்..


மும்பை : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம், வரும் மார்ச் மாதத்திற்குள் 17 சர்க்கள்களில் 4ஜி சேவையை விரிவுபடுத்தி, மேலும் 2,400 நகரங்களுக்கு அதிநவீன இன்டர்நெட் சேவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வோடபோன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் சூட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக, கேரளா, கர்நாடகா, கோல்கட்டா, டில்லி மற்றும் என்.சி.ஆர்., மும்பை . ஹரியானா, உத்தரபிரதேசம் (கிழக்கு), குஜராத், மேற்குவங்கம், ராஜஸ்தான், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் (மேற்கு), ஒடிசா மற்றும் பஞ்சாப் நகரங்களில் 4ஜிசேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த 17 சர்க்கிள்களின் மூலம், வோடபோன் இந்தியா நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் 91 சதவீத மொத்த வருவாய் மற்றும் 95 சதவீத மொபைல் டேட்டா மூலமான வருவாய் இந்த 17 சர்க்கிள்களின் மூலமே கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்விதமாக, நிறுவனம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை செய்துவருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்