January 22, 2017

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி, அறிவிப்பு நாளை (23.01.17) வெளியாக வாய்ப்பு


📝 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி, அறிவிப்பு நாளை (23.01.17) வெளியீடு....
💉 'மருத்துவப் படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

💊 இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம், நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

🔴 கடந்த ஆண்டு, தமிழக அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகளில், நீட் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

🔵 இந்த ஆண்டு நீட் தேர்வில், தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படாது என, தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைவரும் நீட் தேர்வை எழுத வேண்டும் என, கூறப்படுகிறது.

🔴 இது குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்போ, சுகாதாரத் துறையோ, தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை.

🔵 இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கைக்கான, நீட் நுழைவுத் தேர்வு, மே, 7ல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

🔴 இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை மறுநாள் துவங்கலாம் என்றும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை வெளியாகும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்