January 22, 2017

ரேஷனில் பொருட்கள் வாங்காத, 'என்' கார்டுதாரர்கள், இணைதயளத்தில் புதுப்பிக்கும் வசதியை, தமிழக உணவுத் துறை அறிமுகப்படுத்த உள்ளது.


🌺 எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு பிரிவில், நிறைய ரேஷன் கார்டுகள் உள்ளன. 2016 டிசம்பர் மாதத்துடன், ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம் முடிந்தது.



🌺 'என்' கார்டு தவிர, மற்ற கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, ஆயுட்காலம், வரும் டிசம்பர், வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

🌺 இந்நிலையில், 'என்' கார்டுதாரர்கள், இணையதளத்தில் புதுப்பிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்க உள்ளது.

🌺 இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, 65 ஆயிரம், 'என்' கார்டுகள் உள்ளன. அவர்கள், பொது வினியோக திட்ட இணையதளத்தில், கார்டு புதுப்பிக்கும் வசதி துவங்கப்பட உள்ளது. அதன்படி கார்டுதாரர், இணையதள பக்கத்தில் உள்ள, புதுப்பிக்கும் பகுதியில், கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், அதில் வரும் பக்கத்தை, 'பிரின்ட்' எடுத்து, ரேஷன் கார்டில் இணைத்து கொள்ளலாம். ஓரிரு தினங்களில், இந்த சேவை அதிகாரபூர்வமாக துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்