January 21, 2017

மெரினாவில் நேற்று (20.01.2017) ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர்.


🐮 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

🐮 இதனால், சென்னை உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் சுமார் 25 லட்சம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

🐮 மெரினாவில் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் திரண்டதால் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது.



🐮 4வது நாளாக நேற்று மெரினாவில் அதிகாலையில் இருந்தே இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் குவிய தொடங்கினர்.

🐮  இவர்கள் பெரும் திரளாக கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

🐮 இந்த போராட்டத்தில், அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

🐮 மாணவர்கள் காலை 8 மணியில் இருந்தே, சாரை சாரையாக மெரினா கடற்கரையை நோக்கி சைக்கிள், இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்துகளில் லட்சக்கணக்கில் ஒன்று கூடினர்.

🐮 அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்திக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

🐮 மணல் பரப்பே தெரியாத அளவுக்கு காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரை மக்கள் தலைகளாக காட்சியளித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்