January 27, 2017

5 மாநில தேர்தல்.. 10th, 12th - ம் வகுப்பு CBSE தேர்வு தேதியில் மாற்றம்.




📚 உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு CBSE  தேர்வுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




📚 CBSE பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

📚 பிப்ரவரி 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், சில பாடங்களின் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.

📝 அதன்படி மார்ச் 10-ல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

📝 மார்ச் 23-ல் நடைபெறவிருந்த 10-ம் குருங் படத்தேர்வு மார்ச் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📝 மார்ச் 15 -ல் நடைபெறவிருந்த 10-ம் என்சிசி தேர்வு மார்ச் 23-க்கு மாற்றப்பட்டுள்ளது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📚 12-ம் வகுப்புக்கான தேர்வில் உடற்கல்விக்கான தேர்வு ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்கும்,

📝 சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 20-ந்தேதிக்கும்,

📝 திரையரங்கு ஆய்வு தேர்வு (Theatre Studies paper) ஏப்ரல் 20-ந்தேதிக்குப் பதில் ஏப்ரல் 10-ந்தேதியும்,

📝 தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு (Food Service paper) ஏப்ரல் 29-ந்தேதிக்குப்பதில் ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்