January 27, 2017

Breaking News: ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.





🔵 ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

🔴 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

🔵 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேட்பாளருக்கு இடஒதுக்கீடு பின்பற்றவில்லை எனக் கூறி கடந்த அக்டோபர் மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தது.

🔴 இந்நிலையில் இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

🔵 அப்போது தேர்தல் நடத்த எவ்வளவு காலம் தான் தாமதிப்பீர்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

🔴 மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

🔵 இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

🔴 தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

🔵 இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

🔴 இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது சிரமம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்