January 27, 2017

Breaking News: TNTET 2017 - ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


 TNTET 2017 - தேர்வுகள் 
                                      & 
     புதிய பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் தெளிவான விளக்கம், தீர்ந்தது குழப்பம்: 👇





                   TNTET 2017 - தேர்வுகள் 

📚 TNTET 2017 - தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் இந்த ஆண்டுக்கான [2017] ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.


 புதிய பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள்

📚 தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை    அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.


📺 தகவல்களுக்கான ஆதாரங்கள்:

     📺 தந்தி,
     📺 புதிய தலைமுறை,
     📺 நியூஸ் 18    தொலைக்காட்சிகள்.

     - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

           ☝ இதன் முழு விபரம்:  👇

📚 ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

🔶 நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

🔷 இந்த TET தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

🔶 இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.

🔷 இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.

🔶 இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.

🔷 எனவே இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

🔶 மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

🔷 ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும்.

🔶 தகுத்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும்.

🔷 கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும்.

🔶 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்