December 31, 2016

MBBS முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு!!

எம்பிபிஎஸ் முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு

புதுடெல்லி : எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு எழுத வகை செய்யும் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரம் குறித்து நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான உயர்நிலைக் குழு கவலை தெரிவித்திருந்தது.

 இதையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் தேசிய தகுதி தேர்வு எழுதினால்தான் டாக்டராக பணிபுரிய வகை செய்யும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா 2016 என்ற பெயரில் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் ஜனவரி 6ம் தேதி வரை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ெபாதுவான கவுன்சிலிங் நடத்தவும் இந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்